KUZHALOODHUM KANNANUKU
குழலூதும் கண்ணனுக்கு
Movie: Mella thirandhadhu kadhavu
Singers: K.S.Chithra
Music director: Ilayaraja
குழலூதும் கண்ணனுக்கு குயில் பாடும் பாட்டு கேட்குதா குக்கூ குக்கூ குக்கூ..

என் குரலோடு மச்சான் உங்க குழலோச போட்டி போடுதா..
இலையோடு பூவும் தலையாட்டும் பாரு..
இலையோடு பூவும் காயும் தலையாட்டும் பாரு பாரு..

மல காத்து வீசுறபோது மல்லிகைப்பூ பாடாதா..
மழைமேகம் கூடுறபோது வண்ணமயில் ஆடாதா..

என் மேனி தேனரும்பு..
என் பாட்டு பூங்கரும்பு..
மச்சான் நான் மெட்டெடுப்பேன்..
உன்ன தான் கட்டி வைப்பேன்..
சுகமான தாளம் தட்டி பாடட்டுமா..
உனக்காச்சு எனக்காச்சு சரி ஜோடி நாமாச்சு கேளய்யா..
குழலூதும் கண்ணனுக்கு குயில் பாடும் பாட்டு கேட்குதா குக்கூ குக்கூ குக்கூ..
என் குரலோடு மச்சான் உங்க குழலோச போட்டி போடுதா..
கண்ணா உன் வாலிப நெஞ்ச என் பாட்டு உசுப்புறதா..
கற்கண்டு சர்க்கரை எல்லாம் இப்பதான் கசக்குறதா..

வந்தாச்சு சித்திரைதான்..
போயாச்சு நித்திரதான்..
பூவான பொண்ணுக்குதான்..
ராவானா வேதனதான்..
மெதுவாக தூது சொல்லி பாடட்டுமா..
விளக்கேத்தும் பொழுதானா இளநெஞ்சம் படும் பாடு கேளய்யா..
குழலூதும் கண்ணனுக்கு குயில் பாடும் பாட்டு கேட்குதா குக்கூ குக்கூ குக்கூ..
என் குரலோடு மச்சான் உங்க குழலோச போட்டி போடுதா..
இலையோடு பூவும் தலையாட்டும் பாரு..
இலையோடு பூவும் காயும் தலையாட்டும் பாரு பாரு..
குழலூதும் கண்ணனுக்கு குயில் பாடும் பாட்டு கேட்குதா குக்கூ குக்கூ குக்கூ..
.......................
Songs lyrics from Mella thirandhadhu kadhavu movie: