PUNNAGAIKU NERAM ODHUKU

 புன்னகைக்கு நேரம் ஒதுக்கு




Movie: Appu 

Singers: sukhwinder Singh, anupama,  s.p.b.charan

Music director: Deva 


ஆண்: புன்னகைக்கு நேரம் ஒதுக்கு..
பூப்பறிக்க நேரம் ஒதுக்கு..
நிலவுக்கு நேரம் ஒதுக்கு..
தினம் நிம்மதிக்கு நேரம் ஒதுக்கு..
மழை தண்ணியோடு ஓடும் குமிழி போல்  வாழ்க்கை இருக்கு..
ஒரு ஜோடி காதல் வளர்க்காமல் வாழ்க்கை எதுக்கு..

பெண்: மொட்டுகளை எடுத்தால் தேன் துளிகள் இருக்கு..
கட்டுகளை உடைத்தால் காதலுண்டு நமக்கு..

ஆண்: புன்னகைக்கு நேரம் ஒதுக்கு..
பூப்பறிக்க நேரம் ஒதுக்கு..
நிலவுக்கு நேரம் ஒதுக்கு..
தினம் நிம்மதிக்கு நேரம் ஒதுக்கு..
மழை தண்ணியோடு ஓடும் குமிழி போல்  வாழ்க்கை இருக்கு
ஒரு ஜோடி காதல் வளர்க்காமல் வாழ்க்கை எதுக்கு..

பெண்: மொட்டுகளை எடுத்தால் தேன் துளிகள் இருக்கு..
கட்டுகளை உடைத்தால் காதலுண்டு நமக்கு..

ஆண்: மோகம் என்பது உள்ள வரைக்கும்..
மோகம் என்பது உள்ள வரைக்கும்
தேகம் என்பதில் ஆவி நிலைக்கும்..
அட மண்ணில் பிறப்பதும் விண்ணில் பறப்பதும் சேரும் இடம் மண்ணுதான்..
இதில் சத்தியமானதும் நித்தியமானதும் காதல் சுகம் ஒன்னு தான்..

பெண் : திங்கள் கிடைக்காமல் செவ்வாய் வந்து சேருமா..
முத்தம் கொடுக்காமல் மோட்சம் வந்து சேருமா..

ஆண்: புன்னகைக்கு நேரம் ஒதுக்கு..
பூப்பறிக்க நேரம் ஒதுக்கு..
நிலவுக்கு நேரம் ஒதுக்கு..
தினம் நிம்மதிக்கு நேரம் ஒதுக்கு..
மழை தண்ணியோடு ஓடும் குமிழி போல்  வாழ்க்கை இருக்கு..
ஒரு ஜோடி காதல் வளர்க்காமல் வாழ்க்கை எதுக்கு..

ஓட்டை பானை தேகம் ஆகும்..
ஓட்டை பானை தேகம் ஆகும்
உயிரின் திரவம் வழிந்து போகும்..
அட வண்ணத்துப்பூச்சிகள் ஜாதகம் பார்த்தல் 
சோலைக்கு லாபம் இல்லை
நீ நாளையை பற்றி எண்ணி கிடந்தால் இன்னைக்கும் இன்பமில்லை..

பெண்: பொன்னாங்கண்ணி விடவும் கீீீீீீீரையில் ஏதும் இருக்கா.. 
பொம்பளய விடவும் போதை ஏதும் கிறுக்கா..

ஆண்: புன்னகைக்கு நேரம் ஒதுக்கு..
பூப்பறிக்க நேரம் ஒதுக்கு..
நிலவுக்கு நேரம் ஒதுக்கு..
தினம் நிம்மதிக்கு நேரம் ஒதுக்கு..
மழை தண்ணியோடு ஓடும் குமிழி போல்  வாழ்க்கை இருக்கு..
ஒரு ஜோடி காதல் வளர்க்காமல் வாழ்க்கை எதுக்கு..

பெண்: மொட்டுகளை உடைத்தால் தேன் துளிகள் இருக்கு
கட்டுகளை உடைத்தால் காதலுண்டு நமக்கு..