NINAITHAL NENJU KUZHI INIKUM-YENO YENO
நினைத்தால் நெஞ்சுக்குழி இனிக்கும்
Movie: Appu
Singers: Hariharan, sujatha, Harini
Music director: Deva
ஆண்: நினைத்தால் நெஞ்சுக்குழி இனிக்கும் அது ஏனோ..
சிரித்தால் நெஞ்சுக்குழி அடைக்கும் அது ஏனோ..
குளிரில் எனக்கொரு புழுக்கம் அது ஏனோ..
வெயிலில் எடுக்குது நடுக்கம் அது ஏனோ..
ஏனோ ஏனோ ஏனோ ஏனோ..
பெண்: காதலென்று கவிகள் சொல்வார்கள் அதுதானோ..
நினைத்தால் நெஞ்சுக்குழி இனிக்கும் அது ஏனோ..
சிரித்தால் நெஞ்சுக்குழி அடைக்கும் அது ஏனோ..
பூக்கள் கை கொட்டி சிரிக்கும் அது ஏனோ..
புடவை அடிக்கடி நழுவும் அது ஏனோ..
ஏனோ ஏனோ ஏனோ ஏனோ..
காதலென்று கவிகள் சொல்வார்கள் அதுதானோ..
பெண்: பால் மடியில் வான் நிலவில் தீ வடிவதேனோ..
ராவெழுதும் என் கனவில் தேன் வடிவதேனோ..
ஆண்: மொழியை கண்கள் வெறுக்கும் இது ஏனோ..
பெண்: வார்த்தைகள் நாவிலே உடையுதே ஏனோ..
மண்ணில் நான் வாழ்வதே மறந்ததே ஏனோ..
ஆண்: அஞ்சுக்கும் ஆறுக்குமே இடைவெளி ஏனோ ஏனோ..
நெஞ்சுக்கும் உதட்டுக்குமே தூரங்கள் ஏனோ ஏனோ..
நினைத்தால் நெஞ்சுக்குழி இனிக்கும் அது ஏனோ..
சிரித்தால் நெஞ்சுக்குழி அடைக்கும் அது ஏனோ..
குளிரில் எனக்கொரு புழுக்கம் அது ஏனோ..
வெயிலில் எடுக்குது நடுக்கம் அது ஏனோ..
ஏனோ ஏனோ ஏனோ ஏனோ..
பெண்: காதலென்று கவிகள் சொல்வார்கள் அதுதானோ..
ஆண்: நான் என்பதில் ன் மறைந்து ம் வந்ததும் ஏனோ
போ வென்பதில் போ ஒழிந்து வா வந்ததும் ஏனோ..
பெண்: வெட்கம் என்னை நனைக்கும் இது ஏனோ..
ஆண் : கால் விரல் காவியம் எழுதுதே ஏனோ..
கண்களும் கண்களும் பொய் சொல்லும் ஏனோ..
பெண்: இமைக்கையில் இடி சத்தம் கேட்டதும் ஏனோ ஏனோ..
நெஞ்சுக்குள் காதல் வந்தால் பெண் நிலவரம் இதுதானோ..
ஆண்: நினைத்தால் நெஞ்சுக்குழி இனிக்கும் அது ஏனோ..
சிரித்தால் நெஞ்சுக்குழி அடைக்கும் அது ஏனோ..
குளிரில் எனக்கொரு புழுக்கம் அது ஏனோ..
வெயிலில் எடுக்குது நடுக்கம் அது ஏனோ..
ஏனோ ஏனோ ஏனோ ஏனோ..
பெண்: காதலென்று கவிகள் சொல்வார்கள் அதுதானோ..
.....................
Songs lyrics from Appu movie: