IDAM THARUVAYA

 இடம் தருவாயா



Movie: Appu 

Singers: P.Unni krishnan,  Pop shalini 

Music director: Deva 


ஆண்: இடம் தருவாயா மனசுக்குள்ளே..
இடம் தருவாயா மனசுக்குள்ளே..

பெண்: தர மாட்டேன் தரமாட்டேன் இடம் தரமாட்டேன்..
உள்ளே சென்றால் மனசை விட்டு வரமாட்டாய்..

ஆண்: பகலில் உன் வீட்டில் காவல் ஆவேன்..
இரவில் எப்போதும் சேவகன் ஆவேன்..
விளக்காய் விழித்திருப்பேன் அன்பே..

இடம் தருவாயா மனசுக்குள்ளே..ஏஏ..ஏஏ
இடம் தருவாயா மனசுக்குள்ளே..ஏஏ..ஏஏ

பெண்: இதய வீட்டில் ஓர் இடம் நீ கெஞ்சி கேட்கிறாய்..
வீட்டின் உள்ளே காற்றில்லை என்றால் என் செய்வாய்..

ஆண்: இதய வீட்டில் காற்றில்லையா என்ன செய்குவேன்
உந்தன் மூச்சு பிச்சையிலே நான் தான் வாழ்வேன்

பெண்: வீட்டை விட்டு வெளியே இரு ஆணைகள் இட்டால் என் செய்வாய்..

ஆண்: இருப்பவர்க்கே மனை சொந்தம் என்று ஒரு சட்டம் நான் இடுவேன்..

பெண்: இடம் ஒன்று கொடுத்தால் மடம் ஒன்று பிடிக்கும் கள்ள கண்ணாளன் நீ என்று கண்டேன்..
தரவே தர மாட்டேன்..

ஆண்: இடம் தருவாயா..
இடம் தருவாயா மனசுக்குள்ளே..
இடம் தருவாயா மனசுக்குள்ளே..

பெண்: தர மாட்டேன் தரமாட்டேன் இடம் தரமாட்டேன்..
உள்ளே சென்றால் மனசை விட்டு வரமாட்டாய்..

ஆண்: பகலில் உன் வீட்டில் காவல் ஆவேன்..
இரவில் எப்போதும் சேவகன் ஆவேன்..
விளக்காய் விழித்திருப்பேன் அன்பே..

ஆண்: இதயம் என்னும் மாளிகையில் நூறு வாசலே..
எந்த வழி போவது என்று கேட்கின்றேன்..

பெண்: கண்கள் என்னும் வாசல் வழி புகுந்த கள்வனே 
நுழைந்து கொண்டு வாசல் வழியா கேட்கின்றாய்..

ஆண்: வீட்டுக்குள்ளே ஒளிந்திருக்கும் கள்வனை காட்டி கொடுப்பாயா..

பெண்: கண் கதவை சாத்தி கொள்வேன்
காலம் முழுதும் இருப்பாயா..

ஆண்: இதயம் போலொரு அழகிய வீடு 
எங்கு சென்றாலும் அடைவது ஏது 
எனக்கிடம் தருவாயா அன்பே 

பெண்: இடம் ஒன்று தந்தேன்..
இடம் ஒன்று தந்தேன் மனசுக்குள்ளே..
இடம் ஒன்று தந்தேன் மனசுக்குள்ளே..

ஆண்: தந்தாயே தந்தாயே தந்தாயே.. 
இதய வீட்டின் அத்தனை அறைகளும் தந்தாயே

பெண்: அரண்மனை கதவுகள் மொத்தம் அடைத்தேன் 
எல்லா ஜன்னலும் சாத்தி முடித்தேன்
தப்பிக்க முடியாது அன்பே..






.......................





Songs lyrics from Appu movie: