AMBADHU ROOBA DHAN-VAADA VAA
அம்பது ரூபாதான்
Movie: Appu
Singers: Shankar mahadevan, P.Unni krishnan
Music director: Deva
அம்பது ரூபாதான் அம்பது ரூபாதான்..
நண்பா என் தேவையெல்லாம் நாளுக்கொரு அம்பது ரூபாதான்..
வாடா வா.. நீ வாடா வா..
வாடா வா.. நீ வாடா வா..
ஆசை இல்லை அவஸ்தை இல்லையே நீ வாடா வா..
ஆசை இல்லை அச்சம் இல்லையே நீ வாடா வா..
உன் ஒரு நாளை உன் முழு வாழ்வாய் கொண்டாடு வா..
ஓ பாதத்துக்கு செருப்பிருந்தால் பாதையெல்லாம் மெத்தைதான்..
போதும் என்ற மனமிருந்தால் பூமி எல்லாம் சொர்க்கம் தான்..
அம்பது ரூபாதான் அம்பது ரூபாதான்..
நண்பா என் தேவையெல்லாம் நாளுக்கொரு அம்பது ரூபாதான்..
வயிறு என்னும் பள்ளத்துக்குள்ள வாழ்க்கைய தொலச்சோம் வாழ்க்கைய தொலச்சோம்..
வயித்த விட்டு இதயம் என்னும் வீட்டுக்கு வருவோம் வீட்டுக்கு வருவோம்..
தேய்பிறையால் தான் பௌர்ணமிக்கு பெருமை..
துன்பத்துக்குள் இருக்கு வாழ்க்கையின் இனிமை..
ஓ புத்தியுள்ள ஆளுக்கு ஓ தொட்டதெல்லாம் தூளப்பா..
பறவைக்கு வானத்தில் ஓ மேடு பள்ளம் ஏதப்பா..
ஓ..ஓ..லட்சியம் ஏதும் இல்ல அன்னன்னைக்கு வாழ பாரப்பா..
நீ வாடா வா.. நீ வாடா வா..
உன் ஒரு நாளை உன் முழு வாழ்வாய் கொண்டாடு வா..
நீ வாடா வா..
அம்பது ரூபாதான் அம்பது ரூபாதான்..
நண்பா என் தேவையெல்லாம் நாளுக்கொரு அம்பது ரூபாதான்..
குழந்தைகளாய் இருக்கையிலே
கொள்ளை ஆசை இல்லையே கொள்ளை ஆசை இல்லையே..
குழந்தை மனம் தொலைந்ததனால் வந்ததிந்த தொல்லையே வந்ததிந்த தொல்லையே..
நரகத்தில் இன்பம் காணும் குழந்தையின் வயது..
சொர்க்கத்தில் துன்பம் காணும் மனிதனின் மனது..
ஏஏ பூமி எல்லாம் கடல் என்றால் மீனாக தான் வாழணும்..
வாழ்க்கை உன்னை சூடு வைத்தால் நீ புல்லாங்குழல் ஆகணும்..
அம்பது ரூபாதான் அம்பது ரூபாதான்..
நண்பா என் தேவையெல்லாம் நாளுக்கொரு அம்பது ரூபாதான்..
நீ வாடா வா..நீ வாடா வா..
ஆசை இல்லை அவஸ்தை இல்லையே நீ வாடா வா..
ஆசை இல்லை அச்சம் இல்லையே நீ வாடா வா..
உன் ஒரு நாளை உன் முழு வாழ்வாய் கொண்டாடு வா..
அம்பது ரூபாதான் அம்பது ரூபாதான்..
நண்பா என் தேவையெல்லாம் நாளுக்கொரு அம்பது ரூபாதான்..
.....................
Songs lyrics from Appu movie: