ENNAI THEENDI VITTAI

 என்னை தீண்டி விட்டாய்



Movie: Kuthu    

Singers: Prasanna rao, Chinmayi

Music director:  Srikanth Deva 


ஆண்: எனை தீண்டி விட்டாள்
திரி தூண்டி விட்டாள்
எனை நானே தொலைத்துவிட்டேன்..
ஒரு மார்கழியின் முன் பனி இரவில்
எனை நானே எரித்துவிட்டேன்..

எனை தீண்டி விட்டாள்
திரி தூண்டி விட்டாள்
எனை நானே தொலைத்துவிட்டேன்..
ஒரு மார்கழியின் முன் பனி இரவில்
எனை நானே எரித்துவிட்டேன்..
இதழின் ஓரம் இழைந்து ஓடும்
அவள் சிரிப்பில் விழுந்துவிட்டேன்..
அவள் கூந்தல் எனும் ஏணி 
அதை பிடித்தே எழுந்துவிட்டேன்..
கடந்து போகும் காற்றில் ஆடும் 
அவள் மூச்சில் கரைந்துவிட்டேன்..
இது போதும் இது போதும் என் வாழ்வை வாழ்ந்துவிட்டேன்..

பெண்: என் ராத்திரியில் உன் சூரியனை எதற்காக எரியவிட்டாய்..
என் கனவுகளில் உன் நிலவுகளை எதற்காக கருகவிட்டாய்..

என் ராத்திரியில் உன் சூரியனை எதற்காக எரியவிட்டாய்..
என் கனவுகளில் உன் நிலவுகளை எதற்காக கருகவிட்டாய்..
எனது தோட்டம் உனது பூக்கள் எதற்காக உதிர விட்டாய்..
மனதோடு மணல் வீடு எதற்காக செதுக்கி விட்டாய்..
எனது காற்றில் உனது மூச்சை எதற்காக அனுப்பி வைத்தாய்..
உயிரின்றி உடல் வாழ பின்பு ஏன் நீ தூற்றி விட்டாய்..



 

.......................





Songs lyrics from Kuthu movie: