THINNADHEY

 தின்னாதே



Movie: Paarthen Rasithen

Singers: Shankar mahadevan,  Anuradha sriram 

Music director: Bharadwaj 


ஆண்: தின்னாதே என்னை தின்னாதே..
தின்னாதே என்னை தின்னாதே..

தின்னாதே என்னை தின்னாதே..
சுட்டு விழியில் என்னை சுட்டு தின்னாதே..
நீ சைவம் தானே பெண்ணே என்னை தின்னாதே..
ஜோடி கண்ணில் என்னை கொத்தி 
ஜோடி மார்பில் என்னை குத்தி கொன்றவளே..
தின்னாதே  என்னை தின்னாதே..
தின்னாதே என்னை தின்னாதே..

பெண்: சீ..சீ..சீ..சீண்டாதே என்னை சீண்டாதே..
தின்னுவதை விடவும் இங்கு தின்ன படுதல் இன்னும் இன்பம் அல்லவா அல்லவா..
சீண்டாதே என்ன சீண்டாதே..

ஆண்: பெண் வாடை அறியாத முனியாக நானிருந்தேன்..
முந்தானைப்பூ வாசம் காட்டிவிட்டாயே..

பெண்: ஒரு ஒரு ஒரு பாவம் அறியாத பூவாக நானிருந்தேன்..
பூ மீது பெட்ரோலை ஊற்றிவிட்டாயே..

ஆண்: பூவுக்குள்ளே தீ பிடித்தால் கொதிக்க கொதிக்க தேன் கிடைக்கும்..

பெண்: சுட சுட குடித்து விடு
தீர்ந்த பிறகும் தேன் சுரக்கும்..

ஆண்: பார்வை என்னும் ஈட்டி போட்டு கொன்று என்னை கூறு போட்டு  
உதட்டு மீது அடுப்பு மூட்டி சமைப்பவளே 
தின்னாதே என்னை தின்னாதே..
தின்னாதே என்னை தின்னாதே..

பெண்: சீண்டாதே என்னை சீண்டாதே..

ஆண்: ஒரு நூறு பேராறு உள்நாட்டில் ஓடுகையில் 
உன் தாகம் தீர என் குருதி கேட்டாயே..

பெண்: சுவையாறு என்பார்கள் சுவை ஏழு என்பேன் நான் 
இதழ் கொண்ட சுவை சொல்ல மறந்து விட்டாரே..

ஆண்: ஏ..குடலுக்கு பசி எடுத்தால் உணவு கொடுக்க அடங்கிவிடும்..

பெண்: உடலுக்கு பசி எடுத்தால் கொடுக்க கொடுக்க வளர்ந்துவிடும்..

ஆண்: வண்டு விழியில் என்னை கொன்று 
சுண்டு விரலில் துண்டு செய்து 
மார்பு சூட்டில் என்னை சுட்டு சமைத்தவளே..

தின்னாதே என்னை தின்னாதே..
தின்னாதே என்னை தின்னாதே..

தின்னாதே ஓ தின்னாதே..
சுட்டு விழியில் என்னை சுட்டு தின்னாதே..
நீ சைவம் தானே பெண்ணே என்னை தின்னாதே..
ஜோடி கண்ணில் என்னை கொத்தி 
ஜோடி மார்பில் என்னை குத்தி கொன்றவளே 
தின்னாதே  என்னை தின்னாதே..
தின்னாதே என்னை தின்னாதே..





........................






Songs lyrics from parthen Rasithen movie: