ENAKENA YERKANAVE
எனக்கென ஏற்கனவே
Movie: Paarthen Rasithen
Singers: Unni krishnan, Harini
Music director: Bharadwaj
ஆண்: எனக்கென ஏற்கனவே பிறந்தவள் இவளோ..
இதயத்தை கயிறு கட்டி இழுத்தவள் இவளோ..
ஒளி சிந்தும் இரு கண்கள்..
உயிர் வாங்கும் சிறு இதழ்கள்..
என்னுள்ளே என்னுள்ளே ஏதேதோ செய்கிறதே..ஆ...
பெண்: என்னுள்ளே என்னுள்ளே ஏதேதோ செய்கிறதே..
அதை என்னென்று அறியேனடி..
என்னுள்ளே என்னுள்ளே ஏதேதோ செய்கிறதே..
அதை என்னென்று அறியேனடி..
ஓரப்பார்வை பார்க்கும்போதே உயிரில் பாதி இல்லை..
மீதி பார்வை பார்க்கும் துணிவு பேதை நெஞ்சில் இல்லை..
எனது உயிரை குடிக்கும் உரிமை உனக்கே உனக்கே..
ஆண்: உயிரே உயிரே உடம்பில் சிறந்தது எதுவென்று தவித்திருந்தேன்..
அதை இன்று தான் கண்டுபிடித்தேன்..
கண்ணே உன்னை காட்டியதால் என் கண்ணே சிறந்ததடி..
உன் கண்களை கண்டதும் இன்னொரு கிரகம் கண்முன் பிறந்ததடி..
பெண்: காதல் என்ற ஒற்றை நூல்தான் கனவுகள் தொடுக்கின்றது..
காதல் என்ற ஒற்றை நூல்தான் கனவுகள் தொடுக்கின்றது..
அது காலத்தை கட்டுகின்றது..
என் மனம் என்னும் கோப்பையில் இன்று உன் உயிர் நிறைகின்றது..
என் மனம் என்னும் கோப்பையில் இன்று உன் உயிர் நிறைகின்றது..
ஆண்: எனக்கென ஏற்கனவே பிறந்தவள் இவளோ..
இதயத்தை கயிறு கட்டி இழுத்தவள் இவளோ..
பெண்: என்னுள்ளே என்னுள்ளே ஏதேதோ செய்கிறதே..
அதை என்னென்று அறியேனடி..
ஆண்: மார்புக்கு திரையிட்டு மறைக்கும் பெண்ணே
மனசையும் மறைக்காதே..
என் வயதை வதைக்காதே..
புல்வெளி கூட பனித்துளி என்னும் வார்த்தை பேசுமடி..
என் புன்னகை ராணி ஒரு மொழி சொன்னால் காதல் வாழுமடி..
பெண்: வார்த்தை என்னை கைவிடும் போது மௌனம் பேசுகிறேன்..
என் கண்ணீர் பேசுகிறேன்..
எல்லா மொழிக்கும் கண்ணீர் புரியும் உனக்கேன் புரியவில்லை..
எல்லா மொழிக்கும் கண்ணீர் புரியும் உனக்கேன் புரியவில்லை..
ஆண்: எனக்கென ஏற்கனவே பிறந்தவள் இவளோ..
இதயத்தை கயிறு கட்டி இழுத்தவள் இவளோ..
ஒளி சிந்தும் இரு கண்கள்..
உயிர் வாங்கும் சிறு இதழ்கள்..
என்னுள்ளே என்னுள்ளே ஏதேதோ செய்கிறதே..ஆ...
பெண்: என்னுள்ளே என்னுள்ளே ஏதேதோ செய்கிறதே..
அதை என்னென்று அறியேனடி..
என்னுள்ளே என்னுள்ளே ஏதேதோ செய்கிறதே..
அதை என்னென்று அறியேனடி..
ஓரப்பார்வை பார்க்கும்போதே உயிரில் பாதி இல்லை..
மீதி பார்வை பார்க்கும் துணிவு பேதை நெஞ்சில் இல்லை..
எனது உயிரை குடிக்கும் உரிமை உனக்கே உனக்கே..
........................
Songs lyrics from parthen Rasithen movie: