KEDAIKALA KEDAIKALA

 கெடைக்கல கெடைக்கல 

Movie: Paarthen Rasithen

Singers: Srinivas 

Music director: Bharadwaj 

கெடைக்கல கெடைக்கல பொண்ணு ஒன்னும் கெடைக்கல..
புடிக்கல புடிக்கல எந்த பொண்ணுக்கும் என்ன புடிக்கல..
பஸ்சுல பாத்த மைனாவ விட்டு பாதியில் இறங்கி போகாதே..
அட ஒன்ன எண்ணி தூக்கம் இல்ல கண்ண பிச்சு எறியல..

ஓ பொண்ணும் பஸ்சும் ரெண்டும் ஒன்னு..
வாழ்க்கையில பாக்கலாம்..
டெர்மினசு சேரும் முன்னே ப்ரேக்கு டவுனு ஆகலாம்..
பொண்ணும் பஸ்சும் ரெண்டும் ஒன்னு..
வாழ்க்கையில பாக்கலாம்.. 
டெர்மினசு சேரும் முன்னே ப்ரேக்கு டவுனு ஆகலாம்..
பஸ்சு மிஸ்சுனு சொல்ல முடியாது ரூட்டு எப்போவும் மாறலாம்..
நம்பர் பாத்து ஒன்னும் நம்ப முடியாது போர்டு மாத்தி ஓட்டலாம்..
ஒன்னு போனா ஒன்னு வருவது பஸ்சுக்கு மட்டும் பொருந்தலாம் ..
பொண்ணு போனா என்ன வரும் என் பூனைகுட்டிக்கும் தாடி வரும்..
என் தலையெழுத்த பிரம்மனவன் எடது கையால் கிறுக்கிட்டான்..

கெடைக்கல கெடைக்கல பொண்ணு ஒன்னும் கெடைக்கல..
புடிக்கல புடிக்கல எந்த பொண்ணுக்கும் என்ன புடிக்கல..

என்ன பத்தி கவி எழுத கண்ணதாசன் இல்லையே..
எனக்காக குரல் கொடுக்க சந்திரபாபு இல்லையே..

ஆம்பளைங்க விடும் கண்ணீர் எனும் ஷவரில் குளிக்கும் பெண்களே..
செம்பரம்பாக்கம் ஏரிய போல வறண்டு போச்சு கண்களே..
சவுரி முடி எதுக்கடி அது ஆண்களுக்கு சவுக்கடி..
இதயமெல்லாம் காயபட்டும் இன்னும் ஏறிவிட்டது கிறுக்கடி..
அகிம்சையான இம்சையடி காதல் என்னும் நெருக்கடி..

கெடைக்கல கெடைக்கல பொண்ணு ஒன்னும் கெடைக்கல..
புடிக்கல புடிக்கல எந்த பொண்ணுக்கும் என்ன புடிக்கல..
பஸ்சுல பாத்த மைனாவ விட்டு பாதியில் இறங்கி போகாதே..
அட ஒன்ன எண்ணி தூக்கம் இல்ல கண்ண பிச்சு எறியல..

கெடைக்கல கெடைக்கல பொண்ணு ஒன்னும் கெடைக்கல..
புடிக்கல புடிக்கல எந்த பொண்ணுக்கும் என்ன புடிக்கல..

........................

Songs lyrics from parthen Rasithen movie: