EN NENJIL MINGLE AANALE

 என் நெஞ்சில்



Movie: Dheena

Singers: harish ragavendra 

Music director: Yuvan Shankar raja 


என் நெஞ்சில் மிங்கிள் ஆனாளே.. ட்விங்கிள் ஸ்டாரை போலவே..
எனக்கும் வாழ்க்கை ஃபுல்ஃபில் ஆனதே..
மன வென்ட்டிலேட்டர் திறந்தாளே..
கவலை புகையும் போகவே..
டபுளும் இங்கு சிங்கிள் ஆயாச்சே..
ஒரு ஸ்கேனிங் செய்தாளே..
தன் நினைவால் என் இதய பூவை..
ஒரு மீனிங் சொன்னாளே..
அன்பாலே என் வாழ்க்கைக்கு தான்..

அந்த நிலவு மேடை ஏறி..
நான் பாட்டு பாடுவேனே..
விண்மீன்கள் தான் கண் சிமிட்டி கைகள் தட்டும்..
வானவில்லும் எனக்கு ஏழு வரவேற்பு வலையும் போடும்..
பூ மேகங்கள் நான் பாட குஷி ஆகும்..
முகிலின் இடியொலி வெடிச்சரம்..
மின்னல் எடுக்குமே புகைப்படம்..
வாழ்வின் சந்தோஷம் வந்துவிட்டாலே வானம் பூமி இங்கே..

ஒரு மேட்டர் கேட்டதாலே மனம் பாட்டும் பாடுதிங்கே..
கடல் அலை மீது பந்தை போல் ஆட்டம் கொள்ளும்..
சிறு ஈட்டி காட்டும் விழியில் உயிர் மாட்டி கொள்ளும் போது..
தலை கீழாக எதையும் தான் பார்க்க சொல்லும்..
ஒன் வேயில் தனியாக இருந்தேனே..
இனி ரன் வேயில் ஜெட்டாக பறப்பேனே....
காலம் பூராவும் காதல் பூராவும் கூடி வாழும் அன்பே..

என் நெஞ்சில் மிங்கிள் ஆனாளே.. ட்விங்கிள் ஸ்டாரை போலவே.. 
எனக்கும் வாழ்க்கை ஃபுல்ஃபில் ஆனதே..
மன வென்ட்டிலேட்டர் திறந்தாளே..
கவலை புகையும் போகவே..
டபுளும் இங்கு சிங்கிள் ஆயாச்சே..
ஒரு ஸ்கேனிங் செய்தாளே..
தன் நினைவால் என் இதய பூவை..
ஒரு மீனிங் சொன்னாளே..
அன்பாலே என் வாழ்க்கைக்கு தான்..





.....................




Songs lyrics from Dheena Movie: