VANNA NILAVE
வண்ணநிலவே
Movie: Ninaithen vandhai
Singers: Hariharan
Music director: Deva
வண்ணநிலவே வண்ணநிலவே வருவது நீதானா..
வாசனைகள் வருகிறதே வருவது நிஜம்தானா..
ஒரு நூறு நிலாவின் வெளிச்சம் பார்த்தேன் உன் கண்ணில்..
அடி கோடி புறாக்கள் கூட்டம் கண்டேன் என் நெஞ்சில்..
கண் மூடினால் உன் ஞாபகம்..
பூப்பூக்குதே என் வாலிபம்..
வண்ணநிலவே வண்ணநிலவே வருவது நீதானா..
வாசனைகள் வருகிறதே வருவது நிஜம்தானா..
கண்கள் அறியா காற்றை போலே..
கனவில் என்னை தழுவியதென்ன..
பாதி இரவில் தூக்கத்தை கலைக்கும்..
பூவே உந்தன் முகவரி என்ன..
மெதுமெதுவாய் முகம் காட்டும் பௌர்ணமியே ஒளியாதே..
பெயரை கூட சொல்லாமல் என் உயிரை பிழியாதே..
நினைவோடு தந்ததையெல்லாம் ..
நிஜமாக தருவாயா..
உயிருக்கு உயிரை தந்து உறவாட வருவாயா..
வண்ணநிலவே வண்ணநிலவே வருவது நீதானா..
வாசனைகள் வருகிறதே வருவது நிஜம்தானா..
கூந்தல் காட்டில் வழி தெரியாமல் மாட்டி கொண்டேன் என் வழியென்ன..
உன்னை இங்கே தேடி தேடி தொலைந்து போனேன் என் கதி என்ன..
மழை மேகம் நான் ஆனால் உன் வாசல் வருவேனே..
உன் மீது மழையாகி என் ஜீவன் நனைவேனே..
கனவோடு வந்தாய் பெண்ணே..
நேரில் வர பொழுதில்லையோ..
தவம் போதவில்லை என்றே தேவதை வரவில்லையோ..
வண்ணநிலவே வண்ணநிலவே வருவது நீதானா..
வாசனைகள் வருகிறதே வருவது நிஜம்தானா..
ஒரு நூறு நிலாவின் வெளிச்சம் பார்த்தேன் உன் கண்ணில்..
அடி கோடி புறாக்கள் கூட்டம் கண்டேன் என் நெஞ்சில்..
கண் மூடினால் உன் ஞாபகம்..
பூப்பூக்குதே என் வாலிபம்..
.........................
Songs lyrics from Ninaithen vandhai Movie: