UNNAI NINAITHU NAAN ENNAI
உன்னை நினைத்து நான் எனை
Movie: Ninaithen vandhai
Singers: S.P.Balasubramaniam, K.S.Chithra, sujatha
Music director: Deva
பெண்: ஆ..ஆ... உன்னை நினைத்து நான் என்னை மறப்பது அதுதான் அன்பே..
காதல் காதல்..காதல் காதல்..
ஆண்: ஆ..ஆ...உனக்குள்ளே நான் என்னை கரைப்பது அதுதான் அன்பே.. காதல் காதல்..காதல் காதல்..
பெண்: இந்த வார்த்தைக்கு ஒருவித அர்த்தம் இல்லாதது காதல்..
ஆண்: இரு பார்வைகள் மௌனத்தில் பேசுகின்ற மொழி காதல்..
பெண்: இங்கு கீழ் திசை சூரியன் மேல் திசை தோன்றினும் பாதை மாறி போகாது..
காதல் காதல்..காதல் காதல்..
ஆண்: ஆ..ஆ... உன்னை நினைத்து நான் என்னை மறப்பது அதுதான் அன்பே..
காதல் காதல்..காதல் காதல்..
பெண்: அன்றாடம் நூறுவகை பூப்பூக்கும்..
ஆனாலும் காயாகும் சில பூக்கள் தான்..
ஆண்: எல்லோர்க்கும் காதல் வரும் என்றாலும்..
கல்யாண வைபோகம் சில பேர்க்கு தான்..
பெண்: காதலன் காதலி தோற்பதுண்டு..
காதல் தான் எப்போதும் தோற்பதில்லை..
ஆண்: ஊர்மனம் ஒருவரை ஏற்பதுண்டு..
இன்னொரு உறவினை ஏற்பதில்லை..
பெண்: நிறம் மாறி போகாமல்..
சுரம் மாறி போகாமல்..
உயிர் பாடும் ஒரு பாடல் தான்..
காதல் காதல்..காதல் காதல்..
ஆண்: ஆ..ஆ... உன்னை நினைத்து நான் என்னை மறப்பது அதுதான் அன்பே.. காதல் காதல்..காதல் காதல்..
ஆண்: பூவிழியில் ஏற்றி வைத்த தீபம் இது..
புயல் காற்று அடித்தாலும் அணையாதது..
பெண்: புன்னகையில் போட்டு வைத்த கோலம் இது
மழை மேகம் பொழிந்தாலும் அழியாதது..
ஆண்: நாயகன் ஆடிடும் நாடகம் தான்..
யாருக்கு யார் என்று எழுதி வைத்தார்..
பெண்: நடக்கட்டும் திருமணம் நல்லபடி..
இங்கொரு பெண்மனம் வாழ்த்தும் படி..
ஆண்: ஒரு ஜென்மம் போனாலும்..
பெண்: ஒரு ஜென்மம் போனாலும்..
மறு ஜென்மம் ஆனாலும்..
ஒரு ஜென்மம் போனாலும்..
மறு ஜென்மம் ஆனாலும்..
தொடர்கின்ற கதை தானம்மா..
காதல் காதல்..காதல் காதல்..
பெண்: ஆ..ஆ... உன்னை நினைத்து நான் என்னை மறப்பது அதுதான் அன்பே.. காதல் காதல்..காதல் காதல்..
ஆ..ஆ...உனக்குள்ளே நான் என்னை கரைப்பது அதுதான் அன்பே.. காதல் காதல்..காதல் காதல்..
.........................
Songs lyrics from Ninaithen vandhai Movie: