POTTU VAITHU POOMUDIKUM

 பொட்டு வைத்து பூமுடிக்கும்



Movie: Ninaithen vandhai

Singers: S.P.Balasubramaniam,  Swarnalatha 

Music director: Deva


ஆண்: பொட்டு வைத்து பூமுடிக்கும் நிலா..
தேரில் வரும் உலா..
காதலுக்கு கார்த்திகை மாதம் விழா..

பெண்: வெட்க பட்டு சொக்கி நிக்கும் நிலா..
மாலை இடும் விழா..
வேரில் இன்று பழுத்தது காதல் பலா..

ஆண்: நினைத்தேன் வந்தாய் கண்ணுக்குள்ளே..

பெண்: நீதான் இருந்தாய் நெஞ்சுக்குள்ளே..
கல்யாண சங்கீதம் காற்றோடு மிதக்க..

ஆண்: பொட்டு வைத்து பூமுடிக்கும் நிலா..
தேரில் வரும் உலா..
காதலுக்கு கார்த்திகை மாதம் விழா..

பெண்: வெட்க பட்டு சொக்கி நிக்கும் நிலா..
மாலை இடும் விழா..
வேரில் இன்று பழுத்தது காதல் பலா..

ஆண்: மூடி வைத்த அழகை..
அடி மூச்சு முட்ட திறக்க..
மனம் தத்தளித்து தவிப்பதென்ன..

பெண்: கண்கள் ரெண்டும் துடிக்க..
நெஞ்சில் கெட்டிமேளம் அடிக்க..
என் மஞ்சள் இன்று சிவப்பதென்ன..

ஆண்: உந்தன் தூக்கம் என் மார்பில்..

பெண்: கூந்தல் பூக்கள் உன் தோளில்..

ஆண்: ஆ..ஆ...ஆ..முத்தமிட்டு முத்தமிட்டு..
உச்சம் எல்லாம் தொட்டு விட்டு..
காமன் அவன் சன்னதிக்குள் காணிக்கைகள் அள்ளிகொடு..

ஆண்: பொட்டு வைத்து பூமுடிக்கும் நிலா..
தேரில் வரும் உலா..
காதலுக்கு கார்த்திகை மாதம் விழா..

பெண்: வெட்க பட்டு சொக்கி நிக்கும் நிலா..
மாலை இடும் விழா..
வேரில் இன்று பழுத்தது காதல் பலா..

ஆண்: தத்தளித்து உருகும்..
உடல் முத்தத்துக்குள் கரையும்..
அதில் மெத்தை எல்லாம் பூப்பூக்கும்..

பெண்: கட்டிலுக்குள் இரவு..
தினம் சிக்கி சிக்கி உடையும்..
உன் பூவுடல் தேன் வார்க்கும்..

ஆண்: நகக்குறி நாளும் நான் பதிப்பேன்..

பெண்: புது புது கவிதை நான் படிப்பேன்..

ஆண்: ஆ..ஆ.ஆ..காலை வரும் சூரியனை லஞ்சம் தந்து ஓட விட்டு..
எப்பொழுதும் வெண்ணிலவை ரசிக்கணும் தொட்டு தொட்டு..

ஆண்: பொட்டு வைத்து பூமுடிக்கும் நிலா..
தேரில் வரும் உலா..
காதலுக்கு கார்த்திகை மாதம் விழா..

பெண்: வெட்க பட்டு சொக்கி நிக்கும் நிலா..
மாலை இடும் விழா..
வேரில் இன்று பழுத்தது காதல் பலா..






.........................





Songs lyrics from Ninaithen vandhai Movie: