UNAKKUL NAANE

 உனக்குள் நானே..



Movie: Pachaikili Muthucharam

Singers: Bombay jayashree 

Music director: Harris jayaraj 


ஆண் : மின்னும் பனிச்சாரல் உள் நெஞ்சில் சேர்ந்தாளே..
கண்ணில் உன்னை வைத்து பெண் தைத்து கொண்டாளே..
வெண்ணிலா தூவி தன் காதல் சொன்னாளே..
மல்லிகை வாசம் உன் பேச்சில் கண்டாளே..
பொன் மான் இவளா..
உன் வானவில்லா..
உன் வான் இவளா..
உன் வானவில்லா..

பெண்: உனக்குள் நானே உருகும் இரவில்..
உள்ளத்தை நான் சொல்லவா..
மருகும் மனதின் ரகசிய அறையில்..
ஒத்திகை பார்த்திடவா..
சிறுக சிறுக உன்னில் என்னை..
தொலைத்த மொழி சொல்லவா..
சொல்லா சொல்லும் என்னை வாட்டும்..
ரணமும் தேன் அல்லவா..

உனக்குள் நானே உருகும் இரவில்..
உள்ளத்தை நான் சொல்லவா..

ஏனோ நம் பொய் வார்த்தையேதான்..
ஏன் அதில் உன் என் மௌனமேதான்..
உதட்டில் சிரிப்பை தந்தாய்..
மனதில் கனத்தை தந்தாய்..
ஒருமுறை உன்னை எனக்கென்று சுவாசிக்கவா..
மறுமுறை உன்னை புதிதாக சுவாசிக்கவா..

உனக்குள் நானே உருகும் இரவில்..
உள்ளத்தை நான் சொல்லவா..
மருகும் மனதின் ரகசிய அறையில்..
ஒத்திகை பார்த்திடவா..

தீப்போல் தேன்போல் சலனமேதான்..
மதியின் நிம்மதி சிதையவேதான்..
நிழலை விட்டு சென்றாயே..
நினைவை வெட்டி சென்றாயே..
இனி ஒரு பிறவி உன்னோடு வாழ்ந்திடவா..
அதுவரை என்னை காற்றோடு சேர்த்திடவா..

உனக்குள் நானே உருகும் இரவில்..
உள்ளத்தை நான் சொல்லவா..
மருகும் மனதின் ரகசிய அறையில்..
ஒத்திகை பார்த்திடவா..
சிறுக சிறுக உன்னில் என்னை..
தொலைத்த மொழி சொல்லவா..
சொல்லா சொல்லும் என்னை வாட்டும்..
ரணமும் தேன் அல்லவா..
ரணமும் தேன் அல்லவா..
ரணமும் தேன் அல்லவா..




..................




Songs lyrics from pachaikili muthucharam movie: