UN SIRIPINIL

 உன் சிரிப்பினில்



Movie: Pachaikili Muthucharam

Singers: sowmya rao, Robby

Music director: Harris jayaraj 


பெண்: உன் சிரிப்பினில்..உன் சிரிப்பினில்..
என் மனதின் பாதியும் போக..
உன் இமைகளின்..கண்ணிமைகளின்..
மின்பார்வையில் மீதியும் தேய..
ம்...இன்று நேற்று என்று இல்லை என் இந்த நிலை..
ம்...உன்னை கண்ட நாளினின்றே நான் செய்யும் பிழை..

உன் சிரிப்பினில்..உன் சிரிப்பினில்..
என் மனதின் பாதியும் போக..
உன் இமைகளின்..கண்ணிமைகளின்..
மின்பார்வையில் மீதியும் தேய..

உனக்குள் இருக்கும் மயக்கம்..
அந்த உயரத்து நிலவை அழைக்கும்..
இதழின் விளிம்பு துளிர்க்கும்..
என் இரவினை பனியில் நனைக்கும்..
எதிரினில் நான்..எரிகிற நான்..
உதிர்ந்திடும் மழைச்சரம் நீயே..
ஒருமுறை அல்ல..முதல் முறை அல்ல..
தினம் தினம் என்னை சூழும் தீ..

ஆண்: உன் சிரிப்பினில்..உன் சிரிப்பினில்..
என் மனதின் பாதியும் போக..
உன் இமைகளின்..கண்ணிமைகளின்..
மின்பார்வையில் மீதியும் தேய..

முதல் நாள் பார்த்த வனப்பு..
துளி குறையவும் இல்லை உனக்கு..
உறக்கம் விழிப்பில் கனவாய்..
உனை காண்பதே வழக்கம் எனக்கு..
அருகினிலே..வருகையிலே..
துடிப்பதை நிறுத்துது நெஞ்சம்..
முதல் முதல் இன்று..நிகழ்கிறதென்று..
நடிப்பதில் கொஞ்சம் வஞ்சமே..

பெண்: உன் சிரிப்பினில்..உன் சிரிப்பினில்..
என் மனதின் பாதியும் போக..

ஆண்: உன் இமைகளின்.. கண்ணிமைகளின்..
மின்பார்வையில் மீதியும் தேய..

பெண்: ம்...இன்று நேற்று என்று இல்லை என் இந்த நிலை..
ம்...உன்னை கண்ட நாளினின்றே நான் செய்யும் பிழை..



..................




Songs lyrics from pachaikili muthucharam movie: