KARU KARU VIZHIGALAL

 கரு கரு விழிகளால்


Movie: Pachaikili Muthucharam

Singers: Karthik, Naresh iyer, Krish 

Music director: Harris jayaraj 


கரு கரு விழிகளால்..ஒரு கண் மை என்னை கடத்துதே..
ததும்பிட ததும்பிட சிறு அமுதம் என்னை குடிக்குதே..
இரவினில் உறங்கையில் என் தூக்கம் என்னை எழுப்புதே..
எழுந்திட நினைக்கையில் ஒரு மின்னல் வந்து சாய்க்க..
நீ..ஒரு மல்லி சரமே..
நீ..இலை சிந்தும் மரமே..
என்..புது வெள்ளி குடமே..
உன்னை தேடும் கண்கள்..
ஏ..நீ தங்க சிலையா..
வெண்..நுரை பொங்கும் மலையா..
மன்..மதன் பின்னும் வலையா..
உன்னை தேடும் கண்கள்..

புது புது வரிகளால்..என் கவிதை தாளும் நிறையுதே..
கனவுகள் கனவுகள் வந்து கண்கள் தாண்டி வழியுதே..
மறந்திட மறந்திட என் மனமும் கொஞ்சம் முயலுதே..
மறுபடி மறுபடி உன் முகமே என்னை சூழ..
தாமரை இலை நீர் நீதானா..
தனியொரு அன்றில் நீதானா..
புயல் தரும் தென்றல் நீதானா..
புதையல் நீதானா..

நீ..ஒரு மல்லி சரமே..
மண்ணில்..இலை சிந்தும் மரமே..
மின்னும்..புது வெள்ளி குடமே..
உன்னை தேடும் கண்கள்..
ஏ..நீ தங்க சிலையா..
வெள்ளை..நுரை பொங்கும் மலையா..
அம்பால்..மதன் பின்னும் வலையா..
உன்னை தேடும் கண்கள்..

ஒருநாள் ஒருநாள் என்றே தினமும் போகும்..
மறுநாள் வருமா என்றே இரவில் இதயம் சாகும்..
பேசும் போதே இன்னும் ஏதோ தேடும்..
கையின் ரேகை போலே கள்ளத்தனம் ஓடும்..
நீரே இல்லா பாலையிலே நின்று பெய்யும் மழை மழை..
உள்ளுக்குள்ளே உச்சு கொட்டி.. தொடர்ந்திடும் பிழை பிழை..

கரு கரு விழிகளால்..ஒரு கண் மை என்னை கடத்துதே..
ததும்பிட ததும்பிட சிறு அமுதம் என்னை குடிக்குதே..
இரவினில் உறங்கையில் என் தூக்கம் என்னை எழுப்புதே..
எழுந்திட நினைக்கையில் ஒரு மின்னல் வந்து சாய்க்க..

தாமரை இலை நீர் நீதானா..
தனியொரு அன்றில் நீதானா..
புயல் தரும் தென்றல் நீதானா..
புதையல் நீதானா..

தாமரை இலை நீர் நீதானா..
ஒரு மல்லி சரமே..
தனியொரு அன்றில் நீதானா..
இலை சிந்தும் மரமே..
புயல் தரும் தென்றல் நீதானா..
நீ தங்க சிலையா..
புதையல் நீதானா..


 ஒரு மல்லிச்சரமே..
 



..................




Songs lyrics from pachai kili muthu charam movie: