SOLLAMALE YAAR PAARRHADHU
சொல்லாமலே யார் பார்த்தது
Movie: Poove unakaga
Singers: sujatha mohan, Jayachandran
Music director: S.A.Rajkumar
பெண்: சொல்லாமலே யார் பார்த்தது..
நெஞ்சோடுதான் பூ பூத்தது..
சொல்லாமலே யார் பார்த்தது..
நெஞ்சோடுதான் பூ பூத்தது..
மழை சுடுகின்றதே அடி அது காதலா..
தீ குளிர்கின்றதே அடி இது காதலா..
இந்த மாற்றங்கள் உன்னாலே உருவானதா..
நெஞ்சத்தை தொட்டு தொட்டு..
காதல் சொல்லும் பச்சைக்கிளி..
மொட்டுக்கள் என்ன சத்தம்..
மெல்ல வந்து சொல்லடி..
பெண்: சொல்லாமலே யார் பார்த்தது..
ஆண்: மல்லிகைப்பூ வாசம் என்னை கிள்ளுகின்றது..
அடி பஞ்சுமெத்தை முள்ளை போல குத்துகின்றது..
பெண்: நெஞ்சுக்குள்ளே ராட்டினங்கள் சுற்றுகின்றது..
அந்த சத்தம் கேட்டு மத்தளங்கள் கொட்டுகின்றது..
ஆண்: கண்ணே உன் முந்தானை காதல் வலையா..
உன் பார்வை குற்றால சாரல் மழையா..
பெண்: அன்பே உன் ராஜாங்கம் எந்தன் மடியா..
நீ மீட்டும் பொன் வீணை எந்தன் இடையா..
ஆண்: இதயம் நழுவுதடி..
உயிரும் கரையுதடி..
உன்னோடுதான்..
நெஞ்சுக்குள் ஓடுதடி..
சின்ன சின்ன மின்னல் வெடி..
பஞ்சுக்குள் தீயைப்போல..
பற்றிக்கொள்ளு கண்மணி..
பெண்: சொல்லாமலே யார் பார்த்தது..
பெண்: கண்ணுக்குள்ளே உந்தன் முகம் ஒட்டி கொண்டது..
சுக சொப்பனங்கள் என்னை வந்து சுற்றி கொண்டது..
ஆண்: என்னை விட்டு தென்றல் கொஞ்சம் தள்ளி சென்றது..
நான் உந்தன் பேரை சொன்ன போது அள்ளி கொண்டது..
பெண்: அன்பே நான் எந்நாளும் உன்னை நினைத்து..
புல் மீது பூவானேன் தேகம் இளைத்து..
ஆண்: வில்லோடு அம்பாக என்னை இணைத்து..
சொல்லாத சந்தோஷ யுத்தம் நடத்து..
பெண்: உலக அதிசயத்தில் ஒன்று கூடியது நம் காதலா..
நெஞ்சுக்குள் ஓடுதடி..
சின்ன சின்ன மின்னல் வெடி..
பஞ்சுக்குள் தீயைப்போல..
பற்றிக்கொள்ளு கண்மணி..
பெண்: சொல்லாமலே யார் பார்த்தது..
நெஞ்சோடுதான் பூ பூத்தது..
மழை சுடுகின்றதே அடி அது காதலா..
தீ குளிர்கின்றதே அடி இது காதலா..
இந்த மாற்றங்கள் உன்னாலே உருவானதா..
சொல்லாமலே யார் பார்த்தது..
......................
Songs lyrics from poove unakaga movie:
