IDHAYANGAL NAZHUVUDHU

 இதயங்கள் நழுவுது



Movie: Poove unakaga 

Singers:  Sujatha 

Music director: S.A.Rajkumar 


இதயங்கள் நழுவுது இது என்ன மாயம்..
சுகமாய் வலிக்குது இது என்ன காயம்..
இதயங்கள் நழுவுது இது என்ன மாயம்..
சுகமாய் வலிக்குது இது என்ன காயம்..
நாளும் இங்கே அதிசய உலகம்..
உள்ளங்கையில் பூமிகள் சுழலும்..

இதயங்கள் நழுவுது இது என்ன மாயம்..
சுகமாய் வலிக்குது இது என்ன காயம்..

அன்பில் நெஞ்சை அள்ளி தந்தால்..
காயங்கள் எல்லாம் பூக்கள் ஆனது..
சின்ன சின்ன வார்த்தை சொன்னால்..
தூரங்கள் கூட பாடல் ஆனது..
இரவுக்கு நிலவாய் நீதான் வந்தாய்..
உறவுக்கு முகவரி நீதான் தந்தாய்..
நீதானே அன்பே என்றும் எந்தன் ஆகாயம்..
நீயின்றி போனால் இங்கே வாழ்வே  பொய்யாகும்..

இதயங்கள் நழுவுது இது என்ன மாயம்..
சுகமாய் வலிக்குது இது என்ன காயம்..

என் வாசலில் நீ வந்ததால்..
புள்ளிகள் எல்லாம் கோலம் ஆனது..
என் வாழ்விலே நீ வந்ததால்..
எல்லைகள் எல்லாம் வாசல் ஆனது..
உன்னுடன் வாழும் ஓர் நாள் போதும்..
காலங்கள் யாவும் காதல் வாழும்..
நீ தந்த அன்பில் வாழ்வேன் இங்கே எப்போதும்..
வாழ்வினில் என்றும் உந்தன் நினைவே சங்கீதம்..

இதயங்கள் நழுவுது இது என்ன மாயம்..
சுகமாய் வலிக்குது இது என்ன காயம்..
இதயங்கள் நழுவுது இது என்ன மாயம்..
சுகமாய் வலிக்குது இது என்ன காயம்..
நாளும் இங்கே அதிசய உலகம்..
உள்ளங்கையில் பூமிகள் சுழலும்..





.....................





Songs lyrics from  poove unakaga movie: