MOTTUGALE MOTTUGALE

 மொட்டுகளே மொட்டுகளே


Movie: Roja kootam

Singers: Hariharan,  Sadhana sargham 

Music director: Bharadwaj 


ஆண்: மொட்டுகளே..மொட்டுகளே..
மூச்சுவிடா மொட்டுகளே..
கண்மணியாள் தூங்குகிறாள் காலையில் மலருங்கள்..
பொன் அரும்புகள் மலர்கையிலே.. 
மெல் மெல்லிய சத்தம் வரும்..
என் காதலி துயில் கலைந்தால் என் இதயம் தாங்காது..

பெண்: மொட்டுகளே.. மொட்டுகளே.. 
மூச்சுவிடா மொட்டுகளே..
காதலன் தான் தூங்குகிறான் காலையில் மலருங்கள்..
பொன் அரும்புகள் மலர்கையிலே.. 
மெல் மெல்லிய சத்தம் வரும்..
என் காதலன் துயில் கலைந்தால் என் இதயம் தாங்காது..

பெண்: நீ ஒரு பூ கொடுத்தால் அதை மார்புக்குள் சூடுகிறேன்..
வாடிய பூக்களையும் பேங்க் லாக்கரில் சேமிக்கிறேன்..

ஆண்: உன் வீட்டு தோட்டம் கண்டு இரவில் வந்து சேர்வேன்..
ரோஜாக்களை விட்டு விட்டு முட்கள் திருடி போவேன்..

பெண்: நீ ஆகட்டும் என்றே சொல்லிவிடு..
உன் சட்டையில் பூவாய் பூப்பேன்..

ஆண்: மொட்டுகளே..மொட்டுகளே.. 
மூச்சுவிடா மொட்டுகளே..
கண்மணியாள் தூங்குகிறாள் காலையில் மலருங்கள்..
பொன் அரும்புகள் மலர்கையிலே.. 
மெல் மெல்லிய சத்தம் வரும்..
என் காதலி துயில் கலைந்தால் என் இதயம் தாங்காது..

ஆண்: காதலி மூச்சு விடும் காற்றையும் சேகரிப்பேன்..
காதலி மிச்சம் வைக்கும் தேநீர் தீர்த்தம் என்பேன்..

பெண்: கடற்கரை மணலில் நமது பேர்கள் எழுதி பார்த்தேன்..
அலை வந்து அள்ளி செல்ல கடலை கொல்ல பார்ப்பேன்..

ஆண்: உன் நெற்றியில் வேர்வை கண்டவுடன் நான் வெயிலை வெட்ட பார்த்தேன்..பார்த்தேன்..

பெண்: மொட்டுகளே.. மொட்டுகளே.. 
மூச்சுவிடா மொட்டுகளே..
கண்மணியாள் தூங்குகிறாள் காலையில் மலருங்கள்..
பொன் அரும்புகள் மலர்கையிலே மெல் மெல்லிய சத்தம் வரும்..
என் காதலி துயில் கலைந்தால் என் இதயம் தாங்காது..





 ........................





Songs lyrics from roja kootam movie: