ANNA SAALAIYIL
அண்ணா சாலையில்
Movie: Roja kootam
Singers: Karthik
Music director: Bharadwaj
Thenk you பகவானே..
அண்ணா சாலையில் சென்னை அண்ணா சாலையில்..
ஒரு எட்டு வண்ண வானவில்லை பார்த்தேன்..
எட்டி பிடிக்க விண்ணை முட்டி பறந்தேன்..
அது மழை பட்டு கரைந்திட வேர்த்தேன்..
வா வா வானவில் தேடி..
நா நான் அலைகின்ற நேரம்..
ஐயோ தேடி சென்ற வானவில்லே நேரில் வந்ததே..
அண்ணா சாலையில் சென்னை அண்ணா சாலையில்..
ஒரு எட்டு வண்ண வானவில்லை பார்த்தேன்..
எட்டி பிடிக்க விண்ணை முட்டி பறந்தேன்..
அது மழை பட்டு கரைந்திட வேர்த்தேன்..
ஆயிரம் ஆண்டுகள் தொழில்நுட்பம் பழகி..
ஆண்டவன் படைத்தான் அசத்திடும் அழகி..
கண்கள் பார்த்ததும் கொஞ்சம் அது மூன்றே சதவிகிதம்..
தொன்னுத்தேழும் பார்த்தால் உயிர் போகும் சதவிகிதம்..
ஒவ்வொரு பெண்ணுக்கும் ஒவ்வொன்று அழகு..
நான் கண்ட பெண்ணுக்கு ஒவ்வொன்றுமே அழகு..
வான் கொண்ட நிலவுக்கு முகம் மட்டும் வெளிச்சம்..
நான் கண்ட பெண்ணுக்கு நிழல் கூட வெளிச்சம்..
அவள் வாழும் வீதிக்கு இரவே இல்லை..
இல்லை..
அவள் என்னை பார்க்கட்டும் மரணம் இல்லை..
அண்ணா சாலையில் சென்னை அண்ணா சாலையில்..
ஒரு எட்டு வண்ண வானவில்லை பார்த்தேன்..
எட்டி பிடிக்க விண்ணை முட்டி பறந்தேன்..
அது மழை பட்டு கரைந்திட வேர்த்தேன்..
விண்வெளியில் ரெண்டு நட்சத்திரம் பறித்து..
செண்பகப்பூ ஒன்று அதை மெல்ல துடைத்து..
அடடா அடடா அடடா அவள் விழிகள் செய்தானோ ..
உருளும் விழிகள் கொண்டு இவன் உயிரை கொய்தானோ..
சரி சொன்னால் அவள் மனசுக்குள் இருப்பேன்..
இல்லை என்றால் அவள் கொலுசுக்குள் கிடப்பேன்..
சொர்க்கம் ரெண்டு.. ஒன்று பாவையின் உள்ளத்தில்..
இன்னும் ஒன்று அவள் பாதத்தின் பள்ளத்தில்..
அவளை போல் பெண்ணொருத்தி பூமிக்கில்லை..
இல்லை..
இனிமேலும் படைக்கும் எண்ணம் சாமிக்கில்லை..
அண்ணா சாலையில் சென்னை அண்ணா சாலையில்..
ஒரு எட்டு வண்ண வானவில்லை பார்த்தேன்..
எட்டி பிடிக்க விண்ணை முட்டி பறந்தேன்..
அது மழை பட்டு கரைந்திட வேர்த்தேன்..
வா வா வானவில் தேடி..
நா நான் அலைகின்ற நேரம்..
ஐயோ தேடி சென்ற வானவில்லே நேரில் வந்ததே..
........................
Songs lyrics from roja kootam movie: