APPLE PENNE NEE YAARO
ஆப்பிள் பெண்ணே நீயாரோ
Movie: Roja kootam
Singers: Srinivas
Music director: Bharadwaj
ஆப்பிள் பெண்ணே நீ யாரோ நீ யாரோ நீ யாரோ..
ஐஸ்கிரீம் சிலையே நீ யாரோ நீ யாரோ நீ யாரோ..
கண்ணில் தோன்றி மறையும் கானல் நீரோ..
ஆப்பிள் பெண்ணே நீ யாரோ..
ஐஸ்கிரீம் சிலையே நீ யாரோ..
கண்ணில் தோன்றி மறையும் கானல் நீரோ..
பூவின் மகளே நீ யாரோ..
புன்னகை நிலவே நீ யாரோ..
பாதி கனவில் மறையும் பறவை யாரோ..
என்னை நீ பார்க்கவில்லை..
என் உயிர் நொந்ததடி..
பெண்ணே நீ போன வழியில்..
என் உயிர் போனதடி..
எங்கோ ஓர் சாலை வளைவில் உன் பிம்பம் தொலைந்ததடி..
அங்கேயே நின்று கொண்டு என் உயிர் தேம்புதடி..
மின்னலை கண்டு கண்கள் மூடி கண்களை திறந்தேன் காணவில்லை..
மின்னல் ஒளியை கையில் கொள்ள ஐயோ ஐயோ வசதியில்லை..
என்னை நோக்கி சிந்திய மழைத்துளி எங்கே விழுந்தது தெரியவில்லை..
எந்த சிப்பியில் முத்தாய் போச்சோ இதுவரை ஏதும் தகவலில்லை..
அழகே உன்னை காணாமல்..
அன்னம் தண்ணீர் தொடமாட்டேன்..
ஆகாயத்தின் மறுபக்கம் சென்றால் கூட விடமாட்டேன்..
உன்னை காணும் முன்னே கடவுள் வந்தாலும் கடவுளை தொழ மாட்டேன்..
எங்கோ ஓர் சாலை வளைவில் உன் பிம்பம் தொலைந்ததடி..
அங்கேயே நின்று கொண்டு என் உயிர் தேம்புதடி..
ஆப்பிள் பெண்ணே நீ யாரோ..
ஐஸ்கிரீம் சிலையே நீ யாரோ..
கண்ணில் தோன்றி மறையும் கானல் நீரோ..
பெண்ணே உன்னை மறுமுறை பார்த்தால் லவ்யூ லவ்யூ சொல்வாயா..
பாவம் ஐயோ பைத்தியம் என்று பார்வையினாலே கொல்வாயா..
உலகின் விளிம்பில் நீ இருந்தாலும் அங்கும் வருவேன் அறிவாயா..
உயிரை திருகி கையில் தந்தால் ஓகே என்று சொல்வாயா..
ஆமாம் என்று சொல்லிவிட்டால்..
ஆண்டுகள் நூறு உயிர்தரிப்பேன்..
இல்லை என்று சொல்லிவிட்டால்..
சொல்லின் முடிவில் உயிர் துறப்பேன்..
நான் இன்னொரு கருவில் பிறந்து வந்தேனும் மீண்டும் காதலிப்பேன்..
எங்கோ ஓர் சாலை வளைவில் உன் பிம்பம் தொலைந்ததடி..
அங்கேயே நின்று கொண்டு என் உயிர் தேம்புதடி..
ஆப்பிள் பெண்ணே நீ யாரோ..
ஐஸ்கிரீம் சிலையே நீ யாரோ..
கண்ணில் தோன்றி மறையும் கானல் நீரோ..
பூவின் மகளே நீ யாரோ..
புன்னகை நிலவே நீ யாரோ..
பாதி கனவில் மறையும் பறவை யாரோ.
.......................
Songs lyrics from roja kootam movie: