MINNALGAL KOOTHADUM

 மின்னல்கள் கூத்தாடும்



Movie: Polladhavan  

Singers: Karthik,  Nakul, Bombay jayashree 

Music director: G.V.Prakash kumar 


ஆண்: மின்னல்கள் கூத்தாடும் மழைக்காலம்..
வீதியில் எங்கெங்கும் குடைக் கோலம்..
என் முன்னே நீ வந்தாய் கொஞ்ச நேரம்..
என் விழி எங்கும் பூக்காலம்..
உடல் கொதித்ததே.. உயிர் மிதந்ததே..
அய்யோ அது எனக்குப் பிடித்ததடி..
எடை குறைந்ததே.. தூக்கம் தொலைந்ததே..
அய்யோ பைத்தியமே பிடித்ததடி..

பெண்: மின்னல்கள் கூத்தாடும் மழைக்காலம்..
வீதியில் எங்கெங்கும் குடைக் கோலம்..
என் முன்னே நீ வந்தாய் கொஞ்ச நேரம்..
என் விழி எங்கும் பூக்காலம்..
உடல் கொதித்ததே.. உயிர் மிதந்ததே..
அய்யோ அது எனக்குப் பிடித்ததடா..

ஆண்: எடை குறைந்ததே.. தூக்கம் தொலைந்ததே..
அய்யோ பைத்தியமே பிடித்ததடி..

முதல் முறை என் விரல் பூக்கள் பறித்தது தோட்டத்திலே..
தலையணை உறையில் ஸ்வீட் ட்ரீம்ஸ் பறித்தது தூக்கத்திலே..
காலை தேநீர் குழம்பாய் மிதந்தது சோற்றுக்குள்ளே 
கிறுக்கன் என்றொரு பெயரும் கிடைத்தது வீட்டுக்குள்ளே..

பெண்: காதலே ஒருவகை ஞாபக மறதி..
கண்முன்னே நடப்பது மறந்திடுமே.. வௌவாலை போல் நம் உலகம் மாறி தலைகீழாக தொங்கிடுமே..
உடல் கொதித்ததே.. உயிர் மிதந்ததே.. அய்யோ அது எனக்கு பிடித்ததடா..

ஆண்:  எடை குறையுதே..தூக்கம் தொலையுதே.. 
அய்யோ பைத்தியமே பிடிக்கிறதே..

பெண்: என் பேர் கேட்டால் உன் பேர் சொன்னேன் பதட்டத்திலே..
பக்கத்து வீட்டில் கோலம் போட்டேன் குழப்பத்திலே..
காதல் கவிதை வாங்கிப் படித்தேன் கிரக்கத்திலே..
ஓ குட்டிப் பூனைக்கு முத்தம் கொடுத்தேன் மயக்கத்திலே..

ஆண்:  ஓ ஒரு வகை போதை தானே..
உள்ளுக்குள் வெறியேற்றும் பேய்போல..
ஏன் இந்தத் தொல்லை என்று தள்ளிப் போனால்..
புன்னகை செய்து கொஞ்சும் தாய் போல..

பெண்: உடல் கொதித்ததே.. உயிர் மிதந்ததே..
ஐயோ அது எனக்கு பிடித்ததடா..
எடை குறைந்ததே..தூக்கம் தொலைந்ததே.. 
அய்யோ பைத்தியமே பிடித்ததடா..

ஆண்: மின்னல்கள் கூத்தாடும் மழைக்காலம்..
வீதியில் எங்கெங்கும் குடைக் கோலம்..
என் முன்னே நீ வந்தாய் கொஞ்ச நேரம்..
என் விழி எங்கும் பூக்காலம்..
உடல் கொதிக்குதே.. உயிர் மிதக்குதே..

பெண்: அய்யோ இது எனக்குப் பிடித்ததடா..

ஆண்: எடை குறையுதே.. தூக்கம் தொலையுதே..
அய்யோ பைத்தியமே பிடித்ததடி..





......................



Songs lyrics from Polladhavan  movie: