KOKKARA KOKKARAKO
கொக்கர கொக்கரக்கோ
Movie: Ghilli
Singers: Udit narayan, sujatha mohan
Music director: Vidyasagar
ஆண்: கொக்கர கொக்கரக்கோ.. விடிய கொக்கரக்கோ..
இருந்த இருட்டெல்லாம் இனி மேலே கொக்கரக்கோ..
கொக்கர கொக்கரக்கோ..சேவல் கொக்கரக்கோ..
சேவல் கூவக்குள்ள பெட்டை கோழி கொக்கரக்கோ..
சங்கு சக்கரம் போல.. மனசு சுத்துற வேளை..
சுராங்கணிக்கா மாலுக்கெண்ணா வா..
அதோ பாரு வானம்..
துணி துவைக்குது மேகம்..
விலகி போகுது சோகம்..நீ வா...
கொக்கர கொக்கரக்கோ.. விடிய கொக்கரக்கோ..
இருந்த இருட்டெல்லாம் இனி மேலே கொக்கரக்கோ..
ஆண்: ஓஓ..வெள்ளிமணி கொலுசுக்குள்ள..
துள்ளுகிற மனசுக்குள்ள..
சந்தோஷம் நிலைச்சிருக்க சாமி கிட்ட கேட்டிருக்கேன்..
பெண்: எல்லாரும் அருகிருக்க..
பொல்லாப்பு விலகிருக்க..
அன்பான உங்க கிட்ட ஆண்டவன பாத்திருக்கேன்..
ஆண்: எண்ணம் இருந்தா எதுவும் நடக்கும் தன்னால..
ஹே நீ துணிஞ்சா உலகம் உனக்கு பின்னால..
பெண்: குத்துவிளக்கா சிரிச்சா சிரிச்சா தப்பேது..
கொள்ளையடிச்சான் மனச மனச இப்போது..
ஆண்: நம்ம பக்கம் காத்து வீசுறத பாத்து..
நல்லவங்கள சேர்த்து நீ போடு தினம் கூத்து..
கொக்கர கொக்கரக்கோ..ஏ விடிய கொக்கரக்கோ..
இருந்த இருட்டெல்லாம் இனி மேலே கொக்கரக்கோ..
பெண்: கந்தனுக்கு வள்ளிய போல..
கண்ணனுக்கு ராதைய போல..
ஆசை கொண்ட உயிருக்கெல்லாம் துணையிருக்கு பூமியில..
ஆண்: கண்ணுக்குள்ள கனவிருக்க..
நெஞ்சுக்குள்ள நெனப்பிருக்க..
யாருக்குள்ள யாரு இருக்கா தெரிஞ்சவங்க யாருமில்ல..
பெண்: ரெக்கை கட்டி பறக்கும் பறக்கும் வெள்ளாடு..
வெக்க பட்டு மறைக்கும் மறைக்கும் நெஞ்சோடு..
ஆண்: ஏ சிட்டுகுருவி சிரிக்கும் சிரிக்கும் கண்ணோடு..
கொட்டும் அருவி குதிக்கும் குதிக்கும் என்னோடு..
சிட்டான் சிட்டான் சிடுக்கு..
இப்ப உள்ளதெல்லாம் நமக்கு..
கெட்டத தான் ஒதுக்கு..
இனி நம்ம கிட்ட கெழக்கு..
ஆண்: கொக்கர கொக்கரக்கோ.. விடிய கொக்கரக்கோ..
இருந்த இருட்டெல்லாம் இனி மேலே கொக்கரக்கோ..
கொக்கர கொக்கரக்கோ..சேவல் கொக்கரக்கோ..
சேவல் கூவக்குள்ள பெட்டை கோழி கொக்கரக்கோ..
சங்கு சக்கரம் போல.. மனசு சுத்துற வேளை..
சுராங்கணிக்கா மாலுக்கெண்ணா வா..
அதோ பாரு வானம்..
துணி துவைக்குது மேகம்..
விலகி போகுது சோகம்..நீ வா...
கொக்கர கொக்கரக்கோ.. ஏ விடிய கொக்கரக்கோ..
இருந்த இருட்டெல்லாம் இனி மேலே கொக்கரக்கோ..
கொக்கர கொக்கரக்கோ..சேவல் கொக்கரக்கோ..
சேவல் கூவக்குள்ள பெட்டை கோழி கொக்கரக்கோ..
.....................
Songs lyrics from ghilli movie:
