VEPPAMARAM PULIYAMARAM
வேப்பமரம் புளியமரம்
Movie: Saamy
Singers: Tippu
Music director: Harris jayaraj
வேப்பமரம் புளியமரம் ஆலமரம் அரசமரம்
ஊர விட்டு போக போறேன் கேட்டுக்கோ..
ஆத்தங்கர தெப்பக்குளம்
குளிக்கவரும் செங்கம்பலம்
ஊர விட்டு போக போறேன் கேட்டுக்கோ..
பஞ்சால சங்கு சத்தம் கேட்காத தூரம் போறன்..
ஊர சுத்தும் குருவி பாக்காத தூரம் போறன்..
காக்கி சட்டை போட்டுக்கிட்டு..
போகப்போறேன் ஊர விட்டு..
காக்கி சட்டை போட்டுக்கிட்டு..
போகப்போறான் ஊர விட்டு..
வேப்பமரம் புளியமரம் ஆலமரம் அரசமரம்
ஊர விட்டு போக போறேன் கேட்டுக்கோ..
ஏ ஆத்தங்கர தெப்பக்குளம்
குளிக்கவரும் செங்கம்பலம்
ஊர விட்டு போக போறேன் கேட்டுக்கோ..
சில்லுனு காலையில் எழுந்திரிச்சி
சிலம்ப காத்துல சுழட்டுவேங்க..
சுத்தும் சிலம்பு பட்டு கொஞ்சம் காயம் பட்டா
நான் பொறந்த மண்ணெடுத்து பூசுவேனுங்க..
ஏ பலநாள் ஆசை நெனவாச்சு..
பெத்தவரு மனசு குளுந்தாச்சு..
புல்லட் வண்டி மேல ராக்கெட் வேகத்துல
பந்தாவா சீறிகிட்டு போக போறேங்க..
ஆறுசாமி பவனி சாலையில போனா
பண்ணையாரு போடும் மேல் துண்டும் இறங்கும்..
கலர்கலர் தாவணிய பாத்துட்டா போதும்டா..
சாமியோட பவனி கைய கட்டி நிக்கும்டா..
வேப்பமரம் புளியமரம்..
ஆலமரம் அரசமரம்..
வேப்பமரம் புளியமரம் ஆலமரம் அரசமரம்
ஊர விட்டு போக போறேன் கேட்டுக்கோ..
ஏ ஆத்தங்கர தெப்பக்குளம்
குளிக்கவரும் செங்கம்பலம்
ஊர விட்டு போக போறேன் கேட்டுக்கோ
ஏ ராசா ராசா ராசா ராசா..
ஏ தேனே தேனே தேனே..
எங்க நீ போற ராசா ராசா ராசா ராசா..
ஏ தேனே தேனே தேனே தேனே..
ஏ ஐலே ஐலே ஐலே ஓ..ஓ..
ஐலே ஐலே ஐலே ஓ..
ஐலே ஐலே ஐலே ஓ..
ஐலே ஐலே ஐலே ஓ..
கள்ள நோட்டுங்க அடிக்கிறவன்..
கந்து வட்டி வாங்கி சுரண்டுறவன்..
கோழி திருடுறவன் ஆட்ட அமுக்குறவன்
ஆறு மாச டைமுக்குள்ள திருந்திடுங்க..
வெப்பாட்டி வச்சா அடிப்பேங்க..
பெத்தவள திட்டுனா மிதிப்பேங்க..
கோலி கில்லி தண்டா..ஆடும் பசங்க கண்டா..
கூட்டத்தில் கொண்டாட்டத்தில் சேர்ந்துக்குவேங்க..
ஆக்கரு குத்துற பம்பரத்தை போல
தப்புனு தெரிஞசா தலையில குட்டுவான்..
குட்டு பட்ட நீயும் குற்றம் உணர்ந்துபுட்டா
சத்தியமா எனக்கு வேறொன்னும் வேணான்டா..
வேப்பமரம் புளியமரம் ஆலமரம் அரசமரம்
ஊர விட்டு போக போறான் கேட்டுக்கோ..
ஆத்தங்கர தெப்பக்குளம்
குளிக்கவரும் செங்கம்பலம்
ஊர விட்டு போக போறான் கேட்டுக்கோ..
பஞ்சால சங்கு சத்தம் கேட்காத தூரம் போறன்..
ஊர சுத்தும் குருவி பாக்காத தூரம் போறன்..
காக்கி சட்டை போட்டுக்கிட்டு..
போகப்போறேன் ஊர விட்டு..
ஏலே காக்கி சட்டை போட்டுக்கிட்டு..
போகப்போறான் ஊர விட்டு..
......................
Songs lyrics from saamy movie:
