THIRUNELVELI ALWADA
திருநெல்வேலி அல்வாடா
Movie: Saamy
Singers: Palakkad sriram
Music director: Harris jayaraj
ஆறுமுகசாமிக்கு ஆயுதமா வேலு..
அய்யனாரு சாமிக்கு கையில தான் சூலு..
ஆனைமுக சாமிக்கு புள்ளையார்பட்டி ஊரு..
ஆடிப்பாடும் ஆசாமிக்கு ஃபுல் பாட்டில் பீரு..
எடுத்து உடு மச்சி..
திருநெல்வேலி அல்வாடா.. திருச்சி மலைக்கோட்டடா..
திருநெல்வேலி அல்வாடா.. திருச்சி மலைக்கோட்டடா..
திருப்பதிக்கே லட்டு தந்தா சாமிடா..
இருட்டுக்கடை அல்வா டா..
இட்டிலி கடை ஆயா டா..
உருட்டுக்கட்டை சத்தம் கேட்டா சாமிடா..
வேலிய காக்கும் அந்த நெல்லையப்பர் சாமி..
வேலியா இருப்பான் நீ விரும்பி வந்தா சாமி..
தேவையை தீர்க்கும் அந்த காந்திமதி சாமி..
தேடியே தீர்ப்பான் இந்த பேட்டையில சாமி..
பாளையங்கோட்டையில் ஜெயிலு பக்கம் ரயிலு கூவும்..
திருநெல்வேலி அல்வாடா.. திருச்சி மலைக்கோட்டடா..
திருப்பதிக்கே லட்டு தந்தா சாமிடா..
இருட்டுக்கடை அல்வா டா..
இட்டிலி கடை ஆயா டா..
உருட்டுக்கட்டை சத்தம் கேட்டா சாமிடா..
கோழி முட்டைனு கோழி முட்டைனு கிண்டல் பண்ணக் கூடாது..
முட்டைக்கு மேல முட்டையை வெச்சா எட்டு ஆயிரும் கோபாலு..
குடிக்கிறான்னு குடிக்கிறான்னு கேவலப்படுத்த கூடாது..
ஐநூறு அடிச்சும் அவுட்டு ஆகல டெண்டுல்கர்தான் நம்மாளு..
காஞ்சிபுரம் பட்டு டா பழனிமலை மொட்டைடா..
பாண்டிச்சேரி மில்லி டா நம்ம மதுரையில மல்லிடா..
கோயிலுக்கு நேந்து விட்ட காளை இந்த சாமிடா..
கோவமுன்னு வந்துவிட்டா கூட்டத்தோட காலிடா..
கும்பகோணம் வெத்தலை அது கொஞ்சம் கூட பத்தல..
நாட்டுக் காலச்சக்கர என்ன செக்கு போல சுத்துற..
திருநெல்வேலி அல்வாடா.. திருச்சி மலைக்கோட்டடா..
திருநெல்வேலி அல்வாடா.. திருச்சி மலைக்கோட்டடா..
திருப்பதிக்கே லட்டு தந்தா சாமிடா..
இருட்டுக்கடை அல்வா டா..
இட்டிலி கடை ஆயா டா..
உருட்டுக்கட்டை சத்தம் கேட்டா சாமிடா..
ஆ..டூரிங் டாக்கீஸ் மணலு மேல வாத்தியார் படங்கள் பாத்தவன்..
ஸ்டேரிங்க போல வாழ்க்க போகும் ரூட்ட பாத்து வளைஞ்சவன்..
பூட்டு போட்ட லாரி செட்டுல தூக்கம் போட்டு வாழ்ந்தவன்..
லட்டிய வச்சு முட்டிய பேக்கும் வித்தையெல்லாம் தெரிஞ்சவன்..
ஊத்துக்குளி வெண்ணைடா.. திருச்செந்தூரில் வெல்லம்டா..
சென்னையில என்னடா..
தண்ணி கொஞ்சம் கூட இல்லடா..
ஆழம் பாத்து கால விடு சொல்லுறது சாமிடா..
சாமி கிட்ட மல்லு கட்ட ஆளிருந்தா காமிடா..
தூத்துகுடி உப்புதான்..
நீ ஊத்திக்கிட்டா மப்புதான்..
திண்டுக்கல்லு பூட்டுடா..
நான் சொல்லுறது ரைட்டுடா..
திருநெல்வேலி அல்வாடா.. திருச்சி மலைக்கோட்டடா..
திருப்பதிக்கே லட்டு தந்தா சாமிடா..
இருட்டுக்கடை அல்வா டா..
இட்டிலி கடை ஆயா டா..
உருட்டுக்கட்டை சத்தம் கேட்டா சாமிடா..
வேலிய காக்கும் அந்த நெல்லையப்பர் சாமி..
வேலியா இருப்பான் நீ விரும்பி வந்தா சாமி..
தேவையை தீர்க்கும் அந்த காந்திமதி சாமி..
தேடியே தீர்ப்பான் இந்த பேட்டையில சாமி..
பாளையங்கோட்டையில் ஜெயிலு பக்கம் ரயிலு கூவும்..
..................
Songs lyrics from saamy movie:
