KALYANAM DHAN KATTIKITTU
கல்யாணந்தான் கட்டிகிட்டு
Movie: Saamy
Singers: KK, Yugendran, Srilekha parthasarathy
Music director: Harris jayaraj
ஆண்: கல்யாணம்தான் கட்டிக்கிட்டு ஓடி போலாமா..
இல்ல ஓடிப்போயி கல்யாணம்தான் கட்டிக்கலாமா..
கல்யாணம்தான் கட்டிக்கிட்டு ஓடி போலாமா..
இல்ல ஓடிப்போயி கல்யாணம்தான் கட்டிக்கலாமா..
பெண்: தாலிய தான் கட்டிக்கிட்டு பெத்துக்கலாமா..
இல்ல புள்ளகுட்டி பெத்துக்கிட்டு கட்டிக்கலாமா..
ஆண்: சாம்புராணி வாசத்துல வளர்ந்த சிறுக்கி நீ..
சகுணம் பாத்து சடங்கு பாத்து சிரிச்ச கிறுக்கி நீ..
பெண்: சாமிக்கெல்லாம் சகுணம் ஏதும் தேவையில்லையே..
நீ சாக்கு போக்கு சொல்வதெல்லாம் நியாயம் இல்லையே..
ஆண்: அடியே கல்யாணம்தான் கட்டிக்கிட்டு ஓடி போலாமா..
இல்ல ஓடிப்போயி கல்யாணம்தான் கட்டிக்கலாமா..
பெண்: தாலிய தான் கட்டிக்கிட்டு பெத்துக்கலாமா..
இல்ல புள்ளகுட்டி பெத்துக்கிட்டு கட்டிக்கலாமா..
ஆண்: ருசியா பேசுற..
ருசியா பாக்குற..
ருசியா சமையலு செய்வியா நீ..
பெண்: பசும்பால் நெய்யில துவரம் பருப்ப கடைஞ்சு தாளிச்சு கொடுக்கட்டுமா..
ஆண்: பத்திய சோறா நான் உன்ன கேட்டன்..
கார சாரமா உனக்கு சமைக்க தெரியுமா யம்மா..
பெண்: மிளகுல ரசமா..மொளகா தொக்கா..
நல்லா செய்யுவன்..நீ சாப்பிட்டு பாரு..
ஆண்: நண்டு வறுக்க தெரியுமா..
கோழி பொரிக்க தெரியுமா..
ஆட்டுக்கால நசுக்கி போட்டு சூப்பு வைக்க தெரியுமா..
பெண்: என் இடுப்பு ஓரமா..
இருக்குதய்யா காரமா..
கண்டு நீயும் புடிச்சிட்டா எடுத்துக்கய்யா தாராளமா..
ஆண்: கல்யாணம்தான் கட்டிக்கிட்டு ஓடி போலாமா..
இல்ல ஓடிப்போயி கல்யாணம்தான் கட்டிக்கலாமா..
பெண்: தாலிய தான் கட்டிக்கிட்டு பெத்துக்கலாமா..
இல்ல புள்ளகுட்டி பெத்துக்கிட்டு கட்டிக்கலாமா..
பெண்: ஊரு ஓரமா ஐயனார் போல நீ மீசைய காட்டி மெரட்டுறியே ..
ஆண்: ஓ குஞ்சு பொறிச்சிடும் கோழிய போல நீ
வேலிய தாண்ட அஞ்சுறியே..
பெண்: தேதிய வச்சு தான் பாக்கையும் மாத்துனா..
தேதிய வச்சு தான் பாக்கையும் மாத்துனா..
எல்லைய தாண்டுவன் உன் இஷ்டம் போலதான்..
ஆண்: பங்குனி வரட்டும் பரிசம் தாரேன்..
அதுக்கு முன்னால கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணுடி..
பெண்: மஞ்ச பூசி குளிச்சிட்டா மனசுக்குள்ள வேர்க்குது..
உன்ன நானும் பாத்துட்டா உடம்பு முழுக்க கூசுது..
ஆண்: வெந்தயத்த அரைச்சு தான் தேய்ச்சு விட வரட்டுமா..
விடிய விடிய உனக்கு நான் தலையணையா இருக்கட்டுமா..
ஆண்: ஓஓ.. கல்யாணம்தான் கட்டிக்கிட்டு ஓடி போலாமா..
இல்ல ஓடிப்போயி கல்யாணம்தான் கட்டிக்கலாமா..
பெண்: ஆ..தாலிய தான் கட்டிக்கிட்டு பெத்துக்கலாமா..
இல்ல புள்ளகுட்டி பெத்துக்கிட்டு கட்டிக்கலாமா..
ஆண்: சாம்புராணி வாசத்துல வளர்ந்த சிறுக்கி நீ..
சகுணம் பாத்து சடங்கு பாத்து சிரிச்ச கிறுக்கி நீ..
பெண்: சாமிக்கெல்லாம் சகுணம் ஏதும் தேவையில்லையே..
நீ சாக்கு போக்கு சொல்வதெல்லாம் நியாயம் இல்லையே..
பெண்: ஒரு தாலிய தான் கட்டிக்கிட்டு பெத்துக்கலாமா..
பல புள்ளகுட்டி பெத்துக்கிட்டு கட்டிக்கலாமா..
.................
Songs lyrics from ssamy movie: