VAAYAADI PETHA PULLA
வாயாடி பெத்தப்புள்ள
Movie: Kanaa
Singers: Sivakarthikeyan, Vaikom vijayalakshmi
Music director: Dhibu ninan thomas
வாயாடி பெத்த புள்ள..
வரப்போறா நெல்ல போல..
யார் இவ..
யார் இவ..
கையில சுத்தது காத்தாடி..
காத்துல ஆடுது கூத்தாடி..
கண்ணுல கலரா கண்ணாடி..
வம்புக்கு வந்து நிப்பா..
யார் இவ..
யார் இவ..
ஆண்: யார் இந்த தேவத..
ஆனந்த பூ மக..
வால் மட்டும் இல்லையே..
சேட்டைக்கெல்லாம் சொந்தக்காரி..
யார் இந்த தேவத..
ஊர் கொஞ்சும் என் மக..
நீ எந்தன் சாமி தான்..
என்ன பெத்த சின்ன தாயே.. .
அன்னக்கிளியே...வண்ணகுயிலே..
குட்டி குறும்பே..கட்டி கரும்பே..
செல்ல கிளியே..சின்ன சிலையே..
எந்தன் நகலாய் பிறந்தவளா..ஹே..
பெண்: அப்பனுக்கு ஆஸ்தியும் நான்தானே..
ஆசையா வந்தே பொறந்தேனே..
வானத்தில் பட்டமா ஒசரக்க பறந்தேனே..
எனக்கிருக்கும் கனவு எல்லாமே..
நிலவு கிட்ட சொல்லி வைப்பேனே..
வாசத்தில் விளையுற வயல போல் இருப்பேனே..
ஆண்: பொட்டபுள்ள நெனப்புல பசி எனக்கில்ல
இவ சிரிப்புல மயிலே
வானவில்லின் கொடைக்குள்ள வாழ பஞ்சமில்ல
இடி மின்னல் இவ கூட பாட்டு கட்டி ஆடும்
யார் இந்த தேவத..
வால் மட்டும் இல்லையே
ஆண்: ஆச மக என்ன செஞ்சாலும்
அதட்ட கூட ஆச பட மாட்டேன்
என் மக ஆம்பள பத்துக்கு சமம்தானே..
செவுத்து மேல பந்த போலத்தான்
சனியையும் சுழட்டி அடிப்பாளே
காளைய கூடவும் அண்ணனா நெனப்பாளே..
எப்பவுமே செல்ல புள்ள விளையாட்டு புள்ள
ரெட்டை சுழி புள்ள அழகே..
பெத்தவங்க முகத்துல ஒரு சிரிப்புல
ஆச பொண்ணு ஆயுள் தானே கூடிகிட்டு போகும்
பெண்: வாயாடி பெத்த புள்ள..
வரப்போறா நெல்ல போல..
யார் இவ..
யார் இவ..
கையில சுத்துற காத்தாடி..
காத்துல ஆடுது கூத்தாடி..
கண்ணுல கலரா கண்ணாடி..
வம்புக்கு வந்து நிப்பா..
யார் இவ..
யார் இவ..
ஆண்: யார் இந்த தேவத..
ஆனந்த பூ மக..
வால் மட்டும் இல்லையே..
பெண்: சேட்டைக்கெல்லாம் சொந்தக்காரி..
ஆண்: யார் இந்த தேவத..
ஊர் கொஞ்சும் என் மக..
நீ எந்தன் சாமி தான்..
என்ன பெத்த சின்ன தாயே.. .
....................
Songs lyrics from Kanaa Movie:
