OTHAIYADI PAADHAIYILA
ஒத்தையடி பாதையில
Movie: Kanaa
Singers: Anirudh Ravichandar
Music director: Dhibu ninan thomas
ஒத்தையடி பாதையில தாவி ஓடுறேன்..
அத்த பெத்த பூங்குயில தேடி வாடுறேன்..
சந்தன மால அள்ளுது ஆள வாசம் ஏறுது..
என் கிளி மேல சங்கிலி போல சேர தோணுது..
சர்க்கர ஆல.. சொக்குது ஆள..
மால மாத்த மாமன் வரட்டுமா..
கண்மணியே..
ச தநிச தநி சமகம கச தநிச ககச தபகச ககச
வழியில பூத்த சாமந்தி நீயே..
விழியில சேர்த்த பூங்கொத்து நீயே..
அடியே அடியே பூங்கொடியே ..
கவலை மறக்கும் தாய் மடியே..
அழகே அழகே பெண்ணழகே..
தரையில் நடக்கும் பேரழகே..
நிழலாட்டம் பின்னால
நான் ஓடி வந்தேனே..
ஒரு வாட்டி என்ன பாரேன்ம்மா..
ஒத்தையடி பாதையில தாவி ஓடுறேன்..
அத்த பெத்த பூங்குயில தேடி வாடுறேன்..
பலமுறை நீயும் பாக்காம போனா..
இரும்புக்கு மேல துருவென ஆனேன்..
உசுர உனக்கே நேந்து விட்டேன்..
இருந்தும் நெருங்க பயந்துக்கிட்டேன்..
உயிரே உயிரே என்னுயிரே..
உலகம் நீதான் வா உயிரே..
மனசெல்லாம் கண்ணாடி..
உடைக்காத பந்தாடி..
வதைக்காத கண்ணே கண்மணியே..
ஒத்தையடி பாதையில தாவி ஓடுறேன்..
அத்த பெத்த பூங்குயில தேடி வாடுறேன்..
நெஞ்சுல வீசும் கண்மணி வாசம் காட்டு செண்பகமே..
சங்கதி பேசும் கண்களும் கூசும் காதல் சந்தனமே..
பறவை போல.. பறந்து போக..
கூட சேர்ந்து நீயும் வருவியா..
கண்மணியே..
வா கொஞ்சிடவே..
....................
Songs lyrics from Kanaa Movie:
