VAANIL KAAYUDHEY

 வானில் காயுதே


Movie: Vaali

Singers: Mano, Anuradha sriram 

Music director: Deva


பெண்: உன் பேர் வாசிக்கையிலே
புது ஓசை பிறந்ததே
அது ஆசை ஊட்டுதே
என் மேனி சிலிர்க்குதே
என்னிடம் பேசி போனது சில நூறு பெண்ணடி
என்னிடம் பேச மறுத்தவள் நீ ஒருத்தி தானடி 

பெண்: வானில் காயுதே வெண்ணிலா
நெஞ்சில் பாயுதே மின்னலா
நீ பேசவே ஒரு மொழி இல்லையா
வாசம் போதுமே பூக்கள் வாய் பேசுமா

ஆண்: வானில் காயுதே வெண்ணிலா
நெஞ்சில் பாயுதே மின்னலா
வாய்ப்பை தந்தால் நான் வாய் பேசுவேன்
உனக்கும் சேர்த்து நான் ஒருவன் காதல் செய்வேன்..

பெண்: நதியின் போக்கிலே நாணல் தலை சாயவே

சொல்லி செய்த நிலவு என் அழகு நீ குலவு வா
கண்ணை கொத்தும் அழகு
என் அழகு பெண் அழகு நீ வா வா

ஆண்: மின்சார பெண்ணே ஆறாக ஆனேன்
மின்சாரம் பாய்ந்து மீனாகி போனேன்
யாரென்று தெரியாமல் யோசிக்கிறேன்.

பெண்: யார் என்று என்னை நீ கேட்கவில்லை
மேகத்தின் ஊரை விண் கேட்பதில்லை
ஆசைக்கு அடையாளம் தேவை இல்லை

அன்று வண்ண மின்னலாய் உன் கண்ணில் தோன்றினேன்
நான் போகும் போக்கிலே ஒரு பூவை வீசினேன்

ஆண்: நீ பூவை வீசியே என்னை சாம்பலாக்கினாய்
நீ தீயை வீசினால் நான் என்ன ஆகுவேன்

பெண்: வானில் காயுதே வெண்ணிலா
நெஞ்சில் பாயுதே மின்னலா
வாய்ப்பை தந்தால் நான் வாய் பேசுவேன்
வாசம் போதுமே பூக்கள் வாய் பேசுமா