NILAVAI KONDU VAA
நிலவை கொண்டு வா
Movie: Vaali
Singers: Unni krishnan, Anuradha sriram
Music director: Deva
பெண்: நிலவை கொண்டு வா கட்டிலில் கட்டிவை
மேகம் கொண்டு வா மெத்தை போட்டு வை..
ஆண்: நிலவை பிடித்தேன் கட்டிலில் கட்டினேன்
மேகம் பிடித்தேன் மெத்தை விரித்தேன்
பெண்: காயும் சூரியனை கடலுக்குள் பூட்டி வை
இரவு தொடர்ந்திட இந்திரனை காவல் வை..
ஆண்: காயும் சூரியனை கடலுக்குள் பூட்டினேன்..
இரவு தொடர்ந்திட இந்திரனை நம்பினேன்..
பெண்: இன்று முதல் இரவு..
ஆண்: இன்று முதல் இரவு..
நீ என் இளமைக்கு உணவு..
இன்று முதல் இரவு..
நீ என் இளமைக்கு உணவு..
கிள்ளவா உன்னை கிள்ளவா..
இல்லை அள்ளவா நீ வா..
ஆண்: வரவா வந்து தொடவா..
உன் ஆடைக்கு விடுதலை தரவா..
பெண்: அவசரம் கூடாது அனுமதி தரும் வரையில்..
பொதுவா நான் சொன்னா
நீ சொன்ன படி கேட்கும் காது..
ஆண்: இது போன்ற விஷயத்தில் உன் பேச்சு உதவாது..
பெண்: மெல்ல இடையினை தொடுவாயா..
மெல்ல உடையினை கலைவாயா..
நான் துடிக்கையில் வெடிக்கையில் முத்தங்கள் தருவாயா..
ஆண்: போதுமா..அது போதுமா..
ஆசை தீருமா..அம்மா..
பெண்: மாமா என் மாமா..
இந்த நிலவை ஊதி அணைப்போமா..
ஆண்: காணாத உன் கோலம் கண்கொண்டு காண்கின்றதே..
பெண்: இதழால் உன் இதழால்..
என் வெட்கம் துடைத்து விடுவாயா..
ஆண்: அங்கத்தில் வெட்கங்கள் எங்கெங்கு சொல்வாயா..
பெண்: தேன் எங்கெங்கு உண்டு என்று..
பூ வண்டுக்கு சொல்லாவிட்டால்
அது தான் தேடி உண்ணாமல் பேரின்பம் வாராதுதான்..
ஆண்: இன்பமா..பேரின்பமா..
அது வேண்டுமா..அம்மா..
பெண்: நிலவை கொண்டு வா கட்டிலில் கட்டிவை
மேகம் கொண்டு வா மெத்தை போட்டு வை..
ஆண்: நிலவை பிடித்தேன் கட்டிலில் கட்டினேன்
மேகம் பிடித்தேன் மெத்தை விரித்தேன்
பெண்: காயும் சூரியனை கடலுக்குள் பூட்டி வை
இரவு தொடர்ந்திட இந்திரனை காவல் வை..
ஆண்: காயும் சூரியனை கடலுக்குள் பூட்டினேன்..
இரவு தொடர்ந்திட இந்திரனை நம்பினேன்..
பெண்: இன்று முதல் இரவு..
ஆண்: இன்று முதல் இரவு..
நீ என் இளமைக்கு உணவு..
இன்று முதல் இரவு..
நீ என் இளமைக்கு உணவு..
கிள்ளவா உன்னை கிள்ளவா..
இல்லை அள்ளவா நீ வா..
ஆண்: கிள்ளவா..
பெண்: கிள்ளவா..
ஆண்: உன்னை கிள்ளவா..
பெண்: கிள்ளவா ..
ஆண்: இல்லை அள்ளவா..
பெண்: அள்ளவா..
நீ வா..
...................
Songs lyrics from vaali movie:
