APRIL MAADHATHIL

 ஏப்ரல் மாதத்தில்



Movie: Vaali

Singers: Unni krishnan,  Harini 

Music director: Deva


ஆண்: say love..say love..
Say love..say love..say love..

ஏப்ரல் மாதத்தில் ஓர் அர்த்த ஜாமத்தில்..
என் ஜன்னல் ஓரத்தில் நிலா நிலா..
கண்கள் கசக்கி நான் துள்ளி எழுந்தேன்..
அது காதில் சொன்னது ஹலோ ஹலோ..
நிலா நிலா கை வருமா..
இல்லை இல்லை கை சுடுமா..

பெண்: இதயம் திருடுதல் முறையா..
அந்த களவுக்கு தண்டனைகள் இல்லையா இல்லையா..

ஆண்: முத்தத்தில் கசையடி நூறு..
அந்த முகத்தில் விழ வேணும் இல்லையா இல்லையா..

பெண்: நீ கொண்ட காதலை நிஜம் என்று நான் காண
தற்கொலை செய்ய சொன்னால் செய்வாயா..
தப்பித்து நாடு தாண்டி செல்வாயா..

ஆண்: இதய மலையேறி நெஞ்சென்ற பள்ளத்தில்..
குதித்து நான் சாக மாட்டேனா..
குமரி நீ சொல்லி மறுப்பேனா..

நிலா நிலா கை வருமா..
இல்லை இல்லை கை சுடுமா..

காதில் குத்தாதே காதில் குத்தாதே காதில் குத்தாதே அல்வா குடுக்காதே..
காதில் குத்தாதே காதில் குத்தாதே காதில் குத்தாதே அல்வா குடுக்காதே..

பெண்: மேகத்தின் உள்ளே நானும் ஒளிந்தால்
ஐயோ எப்படி என்னை கண்டு பிடிப்பாய் பிடிப்பாய்..

ஆண்: மேகத்தில் மின்னல் டார்ச் அடித்து 
அந்த வானத்தில் உன்னை கண்டு பிடிப்பேன் பிடிப்பேன்..

பெண்: ஹே கிள்ளாதே..

ஆண்: என்னை கொல்லாதே..
உன் பார்வையில் பூத்தது நானா..

பெண்: சுடு கேள்வி கேட்டாலும் மழை வார்த்தை சொல்கின்றாய்..
என் நெஞ்சு மசியாது தெரியாதா..
கண்ணாடி வளையாது தெரியாதா..

ஆண்: கண்ணாடி முன் நின்று உன் நெஞ்சை நீ கேளு..
தன் காதல் அது சொல்லும் தெரியாதா..
தாழம்பூ மறைத்தாலும் மணக்காதா..

பெண்: ஏப்ரல் மாதத்தில் ஓர் அர்த்த ஜாமத்தில்..
உன் ஜன்னல் ஓரத்தில் நிலா நிலா..

ஆண்: கண்கள் கசக்கி நான் துள்ளி எழுந்தேன்..
அது காதில் சொன்னது ஹலோ ஹலோ..

பெண்: நிலா நிலா கை வருமே..
தினம் தினம் சுகம் தருமே..




...................





Songs lyrics from vaali movie: