POO VIRINJACHU

 பூ விரிஞ்சாச்சு


Movie: Mugavari 

Singers: Unni krishnan,  Anuradha sriram 

Music director: Deva 


பெண்: பூ விரிஞ்சாச்சு..தேன் விழுந்தாச்சு..
வருக வருக அன்பே வாழ்வால் ருசி கண்டேன்..

ஆண்: நீ எனக்குள்ளே நான் உனக்குள்ளே
பிரிவதேது பெண்ணே 
உயிரை பரிமாறு
இலையில் பசுமை போல் நீ இணைந்தாய் 
என் நெஞ்சில் தன்னாலே 
நீயும் நானும் நடப்போம் நிலவின் மேலே..

பெண்: பூ விரிஞ்சாச்சு..தேன் விழுந்தாச்சு 
வருக வருக அன்பே வாழ்வால் ருசி கண்டேன்..

ஆண்: பூ பூத்திருக்கும் முல்லை கொடிகாள்  
பூ பூத்து வைத்து காத்து இருங்கள்
திருமண மாலைக்கு தேதி சொல்லி பறித்து கொள்வோம்

பெண்: தேன் சுமந்திருக்கும் தென்னை மரங்காள் 
தேன் சேர்த்து வைத்து காத்திருங்கள்
திருமண இரவுக்கு தேவைப்படும் எடுத்துகொள்வோம்

ஆண்: மேகங்காள் சிந்தாமல் நின்றாடுங்கள்..

பெண்: நீராட பன்னீரை தான் தூவுங்கள்..

ஆண்: முத்தம் சிந்தவா கண்ணோடு கண்ணோடு..

பெண்: முத்து குளித்தாய் நெஞ்சோடு நெஞ்சோடு..

ஆண்: மொத்தத்தில் உன்னை கொடு..

பெண்: பூ விரிஞ்சாச்சு..தேன் விழுந்தாச்சு 
வருக வருக அன்பே வாழ்வால் ருசி கண்டேன்..

பெண்: நான் மௌனங்களில் கவி படித்தேன்..
நீ செய்கைகளில் மொழி பெயர்த்தாய்..
நாணத்தின் சாயத்தை முத்தமிட்டு முத்தமிட்டு நீ கரைத்தாய்..

ஆண்: என் கனவுகளின் உருவங்களை ..
நீ காற்றில் வந்து படம் பிடித்தாய்.. வலைகளின் ஒளிகளில் வாலிப தூக்கத்தை கலைத்துவிட்டாய்..

பெண்: உன் மார்பு சுட்டாலும் குற்றாலமே..

ஆண்: உன் பேரை சொன்னாலும் சங்கீதமே..

பெண்: முத்தம் கொடுப்பேன் சொல்லாதே சொல்லாதே..

ஆண்: சொல்லி சொல்லியே கொல்லாதே கொல்லாதே..

பெண்: உன் கைகள் இடம் மாறுதே..

பெண்: பூ விரிஞ்சாச்சு..தேன் விழுந்தாச்சு..
வருக வருக அன்பே வாழ்வால் ருசி கண்டேன்..

ஆண்: நீ எனக்குள்ளே நான் உனக்குள்ளே 
பிரிவதேது பெண்ணே உயிரை பரிமாறு
இலையில் பசுமை போல் நீ இணைந்தாய்
என் நெஞ்சில் தன்னாலே 
நீயும் நானும் நடப்போம் நிலவின் மேலே..




......................




Songs lyrics from Mugavari movie: