OH NENJE NENJE
ஓ நெஞ்சே நெஞ்சே
Movie: Mugavari
Singers: Hariharan, Swarnalatha
Music director: Deva
ஆண்: ஓ நெஞ்சே நெஞ்சே ரா ரா ரா ரா ஓ நெஞ்சே நெஞ்சே..
ஓ நெஞ்சே நெஞ்சே ரா ரா ரா ரா ஓ நெஞ்சே நெஞ்சே..
நீ வெள்ளை சந்திர வீதியில் உலா போகிறாய்..
நீ நட்சத்திரங்களில் வாழவே கனா காண்கிறாய்..
நெஞ்சே நீ விண்ணை சுற்றி பறந்தாலும்
உன் காலை மண்ணில் ஊன்றி நில் நில் நில் நில்
பெண்: அன்பே.. அன்பே..
உன் துக்கத்தை விட்டு
விண்ணை தொட்டு உன் பெயரை நிலவில் வெட்டு..
பெண்: காற்றெல்லாம் இனிக்கும் படி.. கண்ணாளா காதுக்குள் பாட்டு படி..
என் காலம் நடக்கட்டுமே என் தேவா..
உன் மார்பில் சாய்ந்தபடி..
ஆண்: ஒரு பார்வை.. சிறு வார்த்தை..
எந்தன் உயிருக்கு கவசமடி..
இறந்தாலும் உயிர் ஊட்டும் உந்தன் விரல்களின் ஸ்பரிசமடி..
பெண்: நான் சொல்லும் சொல்லை கேளாய்..
நாளைக்கு நீயே வெல்வாய்..
சங்கீத நாதங்களுக்கு வேதம் சொல்வாய் வேதம் சொல்வாய்..
ஆண்: பெண்ணே.. பெண்ணே..
உன் ஒற்றை சொல்லுக்கு..
பொன்னும் முத்தும் நான் கொட்டி தர வேண்டும்..
அன்பே..அன்பே..
உன் அன்பு சொல் வேண்டும்..
இன்னும் சொல்லு என் இரத்தம் ஊற வேண்டும்..
பெண்: ஓ நெஞ்சே நெஞ்சே ரா ரா ரா ரா ஓ நெஞ்சே நெஞ்சே..
காலேஜூ காலேஜூ..
அக்கா எந்த காலஜூ..
அக்டோபர் நவம்பர் எந்த மாசம் மேரேஜூ..
ஹார்ட்டோட பீட்டு எல்லாம் லவ் லவ் லவ் லவ்..
ஆண்: சந்தர்ப்பம் அமைந்துவிட்டால் பெண்பூவே..
சங்கீதம் மாற்றி வைப்பேன்..
காலம் தான் கனியும் வரை..
பேசாமல் காற்றுக்கு இசை அமைப்பேன்..
பெண்: கலங்காதே..மயங்காதே..
உந்தன் கனவுக்கு துணை இருப்பேன்..
இந்த பூமி உடைந்தாலும்..
உன்னை உள்ளங்கையில் ஏந்தி பறப்பேன்..
என் நெஞ்சில் சாய்த்து கொள்வேன்..
இதயத்தின் ஓசை கேளு..
என் நெஞ்சில் ஒட்டி செல்லும் பாட்டு கேட்டு மெட்டு போடு..
ஆண்: பூவே..பூவே..உன் மூச்சே சங்கீதம்..
சத்தம் சிந்தும் உன் முத்தம் கூட நாதம்..
வாழ்வின் தீபம் அட நீதான் எப்போதும்..
என்னும் போதும் நீ சொல்லும் சொல்லே வேதம்..
பெண்: ஓ நெஞ்சே நெஞ்சே ரா ரா ரா ரா ஓ நெஞ்சே நெஞ்சே..
ஓ நெஞ்சே நெஞ்சே ரா ரா ரா ரா ஓ நெஞ்சே நெஞ்சே..
ஆண்: நீ வெள்ளை சந்திர வீதியில் உலா போகிறாய்..
நீ நட்சத்திரங்களில் வாழவே கனா காண்கிறாய்..
நெஞ்சே நீ விண்ணை சுற்றி பறந்தாலும்
உன் காலை மண்ணில் ஊன்றி நில் நில் நில் நில்..
......................
Songs lyrics from Mugavari movie:
