AANDE NOOTRAANDE
ஆண்டே நூற்றாண்டே
Movie: Mugavari
Singers: naveen
Music director: Deva
ஆண்டே நூற்றாண்டே உருவாகும் நூற்றாண்டே ..
வையகம் வாழ விடு..
எங்கள் வாசலில் கோலம் இடு..
வெப்பம் இல்லாமல் சுக வெளிச்சம் நீ தர வா..
வெள்ளம் இல்லாமல் மழை மேகம் நீ தர வா..
சதைகள் இல்லாமல் தேக திசுக்கள் நீ தர வா..
இரைச்சல் இல்லாமல் காதில் இன்னிசை நீ தர வா..
நிலவுக்கு போய் வரவே எங்கள் கண்ணுக்கு சிறகு கொடு..
ஒவ்வொரு விடியலிலும் நெஞ்சில் உழைக்கின்ற வலிமை கொடு..
நூற்றாண்டே நூற்றாண்டே நோய்கள் எல்லாம் கலைவாயா..
அழுக்கில்லாத காற்றும் நீரும் அகிலம் முழுதும் தருவாயா..
பெட்ரோலும் தீர்ந்துவிட்டால் கற்காலம் தருவாயா..
பொன்னான வாகனம் ஓடும் பொற்காலங்கள் தருவாயா..
ஒரே நிழல் ஒரே நிஜம் நீ கொண்டு வா நீ கொண்டு வா..
ஒரே பகல் ஒரே நிலை நீ கொண்டு வா நீ கொண்டு வா..
பொய்யே பேசாத புத்துலகம் நீ கொண்டு வா..
பசி இல்லாத பொய் சொல்லாத புது உலகம் நீ கொண்டு வா..
ஒரு பூகம்பம் எங்கும் நேராத அன்னை பூமியை நீ கொண்டு வா..
இல்லறத்தில் பெண்களுக்கு இன்பநிலை தருவாயா..
சமையலறை ஒழிந்த வீடுகள் தாய்மார்க்கெல்லாம் தருவாயா..
பொதி சுமக்கும் குழந்தைகளின் புத்தகங்கள் குறைப்பாயா..
பரிட்சையின்றி கல்வியும் வேண்டும் பாடத்திட்டம் தருவாயா..
ஒரே மொழி ஒரே நீதி நீ கொண்டு வா நீ கொண்டு வா..
ஒரே நிலா ஒரே விழா நீ கொண்டு வா நீ கொண்டு வா..
போரே இல்லாத பொன்னுலகம் நீ கொண்டு வா..
சாதி பாராமல் மனம் பார்க்கின்ற அந்த காதல் நீ கொண்டு வா..
இசை கேட்காமல் கண் துயிலாத அட உலகம் நீ கொண்டு வா..
புத்தம் புது ஆண்டே..தேன் பூக்கும் நூற்றாண்டே..
பூக்கள் நீ தர வா..
தேன் புன்னகை நீ தர வா..
போர்க்களம் உழுதுவிடு..
அங்கே பூச்செடி நட்டுவிடு..
அணுகுண்டு அத்தனையும் பசிஃபிக் கடலில் கொட்டிவிடு..
மனிதர்கள் விரும்பும்வரை மண்ணில் மனிதரை வாழவிடு..
மருத்துவம் இல்லாமல் எங்கள் மானுடம் வாழவிடு..
நிலவுக்கு போய் வரவே எங்கள் கண்ணுக்கு சிறகு கொடு..
ஒவ்வொரு விடியலிலும் நெஞ்சில் உழைக்கின்ற வலிமை கொடு..
வெல் கம் கம் 21st centuary..
வெல் கம் கம் 21st centuary..
வெல் கம் கம் 21st centuary..
வெல் கம் கம் 21st centuary..
......................
Songs lyrics from Mugavari movie:
