KEECHU KILIYE

 கீச்சு கிளியே



Movie: Mugavari 

Singers: Hariharan,  

Music director: Deva 


ஹே ஹே ஹே கீச்சு கிளியே..
என் காதில் தித்தித்தாய்..
இசையாலே எனது புதிய நாளை..
நீ இன்று திறந்தாய்..

ஹே ஹே ஹே கீச்சு கிளியே..
என் காதில் தித்தித்தாய்..
இசையாலே எனது புதிய நாளை..
நீ இன்று திறந்தாய்..

கருவொன்று பிறப்பது பத்து மாதத்தில் 
இருதயம் துடிப்பது ஏழு மாதத்தில்
அதன் உயிர்சதை இசைவது என்றும் அந்த நாதத்தில்..

உயிர்களின் சுவாசம் காற்று
அந்த காற்றின் சுவாசம் கானம்
உலகே இசையே..ஏ..
எந்திர வாழ்க்கையின் இடையே
நெஞ்சில் ஈரத்தை புசிவது இசையே
எல்லாம் இசையே..ஏ..
காதல் வந்தால் அட அங்கும் இசைதான்..
கண்ணீர் வந்தால் அட இங்கும் இசைதான்..
தொட்டில் குழந்தை அழுதால் 
அதை தூங்க வைப்பதும் இந்த இசை தான்..
யுத்த களத்தில் தூக்கம் தொலைத்து 
கண் விழிப்பதற்கும் இந்த இசை தான் 
இசையோடு வந்தோம்
இசையோடு வாழ்வோம்
இசையோடு போவோம்
இசையாவோம்

ஹே ஹே ஹே கீச்சு கிளியே..
என் காதில் தித்தித்தாய்..
இசையாலே எனது புதிய நாளை..
நீ இன்று திறந்தாய்..

இன்னிசை நின்று போனால் என் இதயம் நின்று போகும்..
இசையே..உயிரே..ஏ..
எந்தன் தாய்மொழி இசையே 
என் இமைகள் துடிப்பதும் இசையே
எங்கும் இசையே..ஏ..
மௌனம் மௌனம் என் நெஞ்சை அடைக்கும்
கீதம் கேட்டால் அது மீண்டும் துடிக்கும்
ஐம்புலன்கள் எந்தன் இருப்பு..
செவி மட்டும் தான் ரொம்ப சிறப்பு..
நெஞ்சில் உள்ளது ஜீவன் பிறப்பு..
ஆனால் காதில் உள்ளது ஜீவன் எனக்கு..
இசையோடு வந்தேன்
இசையோடு வாழ்வேன்
இசையோடு போவேன் 
இசையாவேன்...

ஹே ஹே ஹே கீச்சு கிளியே..
என் காதில் தித்தித்தாய்..
இசையாலே எனது புதிய நாளை..
நீ இன்று திறந்தாய்..
ஹே ஹே ஹே கீச்சு கிளியே..
என் காதில் தித்தித்தாய்..
இசையாலே எனது புதிய நாளை..
நீ இன்று திறந்தாய்..


 



......................





Songs lyrics from Mugavari movie: