NAANI KONI
நாணி கோணி
Movie: Maatraan
Singers: Vijay prakash, Karthik, Shreya ghoshal
Music director: Harris jayaraj
ஆண்: ஏ நாணி கோணி ராணி உந்தன்..
மேனி நானும் மொய்க்கிறேன்..
நாணி கோணி ராணி உந்தன்..
மேனி நானும் மொய்க்கிறேன்..
மருதாணி பூத்த காணி உன்னை..
தா நீ என்று கேட்கிறேன்..
நீ தூரம் நின்றால் வேர்க்கிறேன்..
என் பக்கம் வந்தால் பூக்கிறேன்..
ஓர் ஏவல் ஆளாய் மாறினேன்..
என்னை எங்கே என்று தேடினேன்..
நீராய் நீராய் நீ மேகம் தாண்டி வாராய்..
தாராய் தாராய் என் தாகம் தூண்டி நூறாய்..
பாராய் பாராய் நான் உன்னால் ஆனேன் தீவாய்..
கொய்யும் கண்கள் மெய்யும் பேசுமா..
பெண்: நாணி கோணி ராணி எந்தன்..
மேனி ஏனோ மொய்க்கிறாய்..
மருதாணி பூத்த காணி என்னை..
தா நீ என்று கேட்கிறாய்..
நீ தூரம் நின்றால் வேர்க்கிறேன்..
என் பக்கம் வந்தால் பூக்கிறேன்..
ஓர் ஏவல் ஆளாய் மாறினேன்..
என்னை எங்கே என்று தேடினேன்..
நீராய் நீராய் நீ மேகம் தாண்டி வாராய்..
தாராய் தாராய் என் தாகம் தூண்டி நூறாய்..
பாராய் பாராய் நான் உன்னால் ஆனேன் வேராய்..
கொய்யும் கண்கள் மெய்யும் பேசுமா..
ஆண்: ஒரு காலை நேரம் நீ வந்தாலே..
பனி வீசும் காற்றுக்கு பணியாமல் தேகம் சூடேறும்..
கண் பேசும் மௌனமே ஒன்றாக..
நாம் போகும் சாலைகள் முடியாமல் எங்கெங்கோ நீளும்..
பெண்: நதியிலே இலை போல பயணம்..
இனிப்பான தருணம்..
மனதோடு மாய மின்சாரம்..
உன் எதிரே நனையாமல் கரைந்தேன்..
நகராமல் உறைந்தேன்..
மெதுவாக மெதுவாக உனதாகிறேன்..
உயிரே உயிரே உயிர் போக போக தொடும்..
ஆண்: நாணி கோணி ராணி உந்தன்..
மேனி நானும் மொய்க்கிறேன்..
மருதாணி பூத்த காணி உன்னை..
தா நீ என்று கேட்கிறேன்..
பெண்: நீ தூரம் நின்றால் வேர்க்கிறேன்..
என் பக்கம் வந்தால் பூக்கிறேன்..
ஓர் ஏவல் ஆளாய் மாறினேன்..
என்னை எங்கே என்று தேடினேன்..
ஆண்: தொலைதூரம் போனதே என் மேகம்..
புரியாத மென் சோகம்..
உயிர் மேலே ஊசி இறக்கும்..
ஓ..பிரிவாலே இன்று நான் போராட..
விழியோரம் நீரோட..
அவன் கண்ணில் காதல் மயக்கம்..
உன் அழகை வெளி காட்டும் சாரலில்..
எனை போல சாயலில்..
ஒரு ஜீவன் தீண்ட கண்டேனே..
நெஞ்சினிலே புரியாத ஆதங்கம்..
மெலிதான பூகம்பம்..
இருந்தாலும் விழியோரம் சிறு ஆனந்தம்..
இதயம் இதயம் சுகமாக இருக்கும் இனி..
ஆண்: நாணி கோணி ராணி உந்தன்..
மேனி நானும் மொய்க்கிறேன்..
மருதாணி பூத்த காணி உன்னை..
தா நீ என்று யாலாலா..
பெண்: நீ தூரம் நின்றால் வேர்க்கிறேன்..
என் பக்கம் வந்தால் பூக்கிறேன்..
ஓர் ஏவல் ஆளாய் மாறினேன்..
என்னை எங்கே என்று தேடினேன்..
ஆண்: நீராய் நீராய்..
பெண்: ம்..நீ மேகம் தாண்டி வாராய்..
ஆண்: தாராய் தாராய்..
பெண்: என் தாகம் தூண்டி நூறாய்..
ஆண்: பாவாய் பாவாய்..
பெண்: நான் உன்னால் ஆனேன் தீவாய்..
ஆ&பெ: கொய்யும் கண்கள் மெய்யும் பேசுமா..
...................
Songs lyrics from Maatraan movie:
