KAAL MULAITHA POOVE
கால் முளைத்த பூவே
Movie: Maatraan
Singers: Javed ali, Mahalakshmi iyer
Music director: Harris jayaraj
ஆண்: கால் முளைத்த பூவே..
என்னோடு பேலே ஆட வா வா..
வோல்கா நதி போலே..
நில்லாமல் காதல் பாட வா வா..
கேமமில் பூவின் வாசம் அதை..
உன் இதழ்களில் கண்டேனே..
சோவியத் ஓவிய கவிதைகளை ..
உன் விழிகளின் விளிம்பினில் கண்டேன்..
அசையும் அசைவில் மனதை பிசைய...
இதய இடுக்கில் மழையை பொழிய...
உயிரை உரசி அனலை எழுப்ப..
எரியும் வெறியை தெறித்தாய்..
பெண்: ஓ..வால் முளைத்த காற்றே..
என்னோடு பேலே ஆட வா வா..
வோல்கா நதி போலே..
நில்லாமல் காதல் பாட வா வா..
ஆண்: நிலவுகள் தலைகள் குனிந்ததே..
மலர்களின் மமதை அழிந்ததே..
கடவுளின் கடமை முடிந்ததே..
அழகி நீ பிறந்த நொடியிலே..
பெண்: தலைகள் குனிந்ததோ..
மமதை அழிந்ததோ..
கடமை முடிந்ததோ..
பிறந்த நொடியிலோ..
ஆண்: ஏ பெண்ணே..
ஏ பெண்ணே உன் வளைவுகளில்
தொலைவது போலே உணருகிறேன்..
இடையினிலே திணருகிறேன்..
கனவிதுதானா வினவுகிறேன்..
ஆண்: கால் முளைத்த பூவே..
என்னோடு பேலே ஆட வா வா..
வோல்கா நதி போலே..
நில்லாமல் காதல் பாட வா வா..
பெண்: இரவினில் நிலவு எரிகையில்..
திரிகளாய் விரல்கள் எரியுதே..
அருகிலே நெருங்கி வருகையில்..
இளகியே ஒழுக்கம் உருகுதே..
ஆண்: நிலவு எரிகையில்..
விரல்கள் எரியுதோ..
நெருங்கி வருகையில்..
ஒழுக்கம் உருகுதோ..
பெண்: ஏனேனோ..எனை ஏனோ உருக்குகிறாய்..
நெருப்பினை நெஞ்சில் இறக்குகிறாய்..
இடைவெளியை சுருக்குகிறாய்..
இரக்கமே இன்றி இறுக்குகிறாய்..
ஆண்: கால் முளைத்த பூவே..
என்னோடு பேலே ஆட வா வா..
வோல்கா நதி போலே..
நில்லாமல் காதல் பாட வா வா..
கேமமில் பூவின் வாசம் அதை..
உன் இதழ்களில் கண்டேனே..
சோவியத் ஓவிய கவிதைகளை ..
உன் விழிகளின் விளிம்பினில் கண்டேன்..
அசையும் அசைவில் மனதை பிசைய..
இதய இடுக்கில் மழையை பொழிய.. ..
உயிரை உரசி அனலை எழுப்ப..
எரியும் வெறியை தெறித்தாய்..
அசையும் அசைவில் மனதை பிசைய..
இதய இடுக்கில் மழையை பொழிய.. ..
உயிரை உரசி அனலை எழுப்ப..
எரியும் வெறியை தெறித்தாய்..
.....................
Songs lyrics from Maatraan movie:
