KAN IRANDIL

 கண் இரண்டில்



Movie: Uthama puthiran 

Singers: Naresh iyer

Music director: Vijay Antony 


கண் இரண்டில் மோதி நான் விழுந்தேனே..
காரணம் இன்றியே நான் சிரித்தேனே..
என் மனதும் ஏனோ என்னிடம் இல்லை..
வேண்டியே உன்னிடம் நான் தொலைத்தேனே..
என் உயிரின் உயிரே..
என் இரவின் நிலவே..
உன் அருகில் வரவே..
நீ தருவாய் வரமே..

ஓ...ஊருக்குள்ள கோடி பொண்ணு யாரையுமே நினைக்கலயே..
உந்தன் முகம் பார்த்த பின்ன எதுவும் பிடிக்கலயே..
உன்னுடைய பார்வையில என் உடம்பு வேகுதடி..
பக்கத்திலே நீ இருந்தா என் வயசு நோகுதடி..

கண் இரண்டில் மோதி நான் விழுந்தேனே..
காரணம் இன்றியே நான் சிரித்தேனே..
என் மனதும் ஏனோ என்னிடம் இல்லை..
வேண்டியே உன்னிடம் நான் தொலைத்தேனே..

ஓ..ஏதோ ஒன்னு சொல்ல..என் நெஞ்சு குழி தள்ள..
நீ பொத்தி வெச்ச ஆசயெல்லாம் கண்ணு முன்னே தள்ளாட..
கண்ணாமூச்சி ஆட்டம் என் கண்ணுக்குள்ளே ஆட..
நீ சொல்லும் சொல்லே கேட்காமலே உந்தன் உள்ளம் திண்டாட..
உள்ளுக்குள்ள படபடக்க.. 
நெஞ்சுக்குள்ள சிறகடிக்க..
கால் இரண்டும் ரெக்க கட்டி மேல கீழ பரபரக்க..
பட்டுப்பூச்சி பட்டாம்பூச்சி ஆனேனே..

உன் முத்து முத்து பேச்சு..
என் சங்கீதமா ஆச்சு..
உன் சுண்டு விரல் தீண்டயிலே..
நின்னு போச்சு என் மூச்சு..
பஞ்சு மெத்த மேகம்..
அது செஞ்சு வெச்ச தேகம்..
நீ தூரத்தில நின்னா கூட..
பொங்கிடுது என் முகம்..
முட்ட கண்ணு முழி அழகில்..குத்தி குத்தி கொன்னவளே..
சிக்கி கிட்ட என் மனச..ஊற வெச்சு துவச்சவளே..
ஆத்துக்குள்ள அம்மிக்கல்லா போறேனே..

ஊருக்குள்ள கோடி பொண்ணு யாரையுமே நினைக்கலயே..
உந்தன் முகம் பார்த்த பின்ன எதுவும் பிடிக்கலயே..
உன்னுடைய பார்வையில என் உடம்பு வேகுதடி..
பக்கத்திலே நீ இருந்தா என் வயசு நோகுதடி..

கண் இரண்டில் மோதி நான் விழுந்தேனே..
காரணம் இன்றியே நான் சிரித்தேனே..
என் மனதும் ஏனோ என்னிடம் இல்லை..
வேண்டியே உன்னிடம் நான் தொலைத்தேனே..
என் உயிரின் உயிரே..
என் இரவின் நிலவே..
உன் அருகில் வரவே..
நீ தருவாய் வரமே..



...............




Songs lyrics from Uthama puthiran movie: