EN NENJU
என் நெஞ்சு
Movie: Uthama puthiran
Singers: Vijay prakash, Saindhavi
Music director: Vijay Antony
ஆண்: Hey..you are my love..
You are my destiny..
என் நெஞ்சு சின்ன இலை..
நீதான் என் காதல் மழை..
உன்னாலே நான் நனைய வேண்டும்..
பெண்: என் நெஞ்சு சின்ன கொடி..
நீதான் என் காதல் செடி..
உன் மீது சுற்றி கொள்ள வேண்டும்..
ஆண்: பார்வைகள் புது வார்த்தை பரிமாறுதே..
இதயங்கள் இடம் மாறுதே..
பெண்: உன்னால் என் நிமிடங்கள் அழகானதே..
வலி கூட சுகமானதே..
ஆண்: என் நெஞ்சு சின்ன இலை..
நீதான் என் காதல் மழை..
உன்னாலே நான் நனைய வேண்டும்..
பெண்: என் நெஞ்சு சின்ன கொடி..
நீதான் என் காதல் செடி..
உன் மீது சுற்றி கொள்ள வேண்டும்..
ஆண்: உன்னோடு பேசிக்கொள்ள வார்த்தைகள் சேர்த்து வைத்தும்
உள்ளுக்குள் திக்கி தவித்தேன்..
பெண்: உன் பேரை மட்டும் தினம் நெஞ்சுக்குள் சொல்லி சொல்லி
என் பேரை இன்று மறந்தேனே..
ஆண்: மஞ்சள் நிலவே..கொஞ்சல் மொழியே..
வெட்கத் திமிரே சாய்க்காதே..
பெண்: ஆசை கனவே..மீசை புயலே..
நித்தம் நிசியில் நீ கொல்லாதே..
ஆண்: என் நெஞ்சு சின்ன இலை..
நீதான் என் காதல் மழை..
உன்னாலே நான் நனைய வேண்டும்..
பெண்: என் நெஞ்சு சின்ன கொடி..
நீதான் என் காதல் செடி..
உன் மீது சுற்றி கொள்ள வேண்டும்..
ஆண்: உன் மூச்சுக்காற்று பட்டு பூக்கும் பூக்கள் எல்லாம் உன் போலே வாசனைகள் வீசும்..
பெண்: உன்னோடு நான் இருக்கும் நேரங்கள் அத்தனையும் போதாது என்று மனம் ஏங்கும்..
ஆண்: மின்னல் விழியே.. கன்ன குழியே..
குட்டிக்கவிதை நீதானே..
பெண்: முத்த தடமே..சுட்டித்தனமே..
மொத்த சுகமும் நீ என்பேனே..
ஆண்: என் நெஞ்சு சின்ன இலை..
நீதான் என் காதல் மழை..
உன்னாலே நான் நனைய வேண்டும்..
பெண்: என் நெஞ்சு சின்ன கொடி..
நீதான் என் காதல் செடி..
உன் மீது சுற்றி கொள்ள வேண்டும்..
ஆண்: பார்வைகள் புது வார்த்தை பரிமாறுதே..
இதயங்கள் இடம் மாறுதே..
பெண்:ஓ உன்னால் என் நிமிடங்கள் அழகானதே..
வலி கூட சுகமானதே..
ஆண்: என் நெஞ்சு சின்ன இலை..
நீதான் என் காதல் மழை..
உன்னாலே நான் நனைய வேண்டும்..
பெண்: என் நெஞ்சு சின்ன கொடி..
நீதான் என் காதல் செடி..
உன் மீது சுற்றி கொள்ள வேண்டும்..
...................
Songs lyrics from Uthama puthiran movie:
