BOY FRIENDAI PAARTHA
பாய் பிரெண்டை
Movie: Minsara kanna
Singers: Mano, Sujatha mohan
Music director: Deva
பெண்: பாய் ஃப்ரெண்டை பார்த்தா வர சொல்லு நிலவே..என் நிலவே..
பார்த்து ரொம்ப நாளானதே நிலவே என் நிலவே..
அவன் நடையோ தனியழகு
உடையோ தனியழகு
அப்படியோர் ஆணழகு
ஆயிரத்தில் ஓரழகு
ஆண்: பாய் ஃபிரெண்ட் தான் பக்கம் வந்தான் நிலவே..சொல் நிலவே..
பாவை என்னை பார்க்கவில்லையே நிலவே.. கேள் நிலவே..
அவள் நடித்தால் தனியழகு..
துடித்தால் தனியழகு..
ஊடலிலே ஓரழகு..
கூடலிலே நூறழகு..
பெண்: பாய் ஃப்ரெண்டை பார்த்தா வர சொல்லு நிலவே..என் நிலவே..
பெண்: உன் வாலிபம் பொல்லாதது
உன் விழியினில் தடுக்கி விழுந்துவிட்டேன்
நீ உதவ வரவில்லையே..
ஆண்: உன் மோகனம் பொன்னானது
உனை விழுந்ததும் எடுத்து மடியில் வைத்தேன்
நீ உனது வசம் இல்லையே..
பெண்: எனக்கென்றே தனியாக ஸ்வாசங்கள் கிடையாது ..
இருவருக்கும் உயிர் காற்று ஒன்றேதான் எனும்போது..
ஆண்: இந்த உறவுகள் உடையாது..
இதை உடைப்பவன் கிடையாது..
இங்கு இரவுகள் ஆனால் விரகங்கள் நமது இதயத்தை குடையாது
பெண்: பாய் ஃப்ரெண்டை பார்த்தா வர சொல்லு நிலவே..என் நிலவே..
ஆண்: பாவை என்னை பார்க்கவில்லையே நிலவே.. கேள் நிலவே..
ஆண்: சந்த்ரோதயம் சூர்யோதயம்
உன் இருவிழி கொடுத்த இரவல்களோ
என உலகம் நினைக்கின்றதே
பெண்: சந்தோஷமும் சங்கீதமும்
நீ மருவிட விளையும் அருவிகளோ
என் மனது நனைக்கின்றதே
ஆண்: நாம் இதுபோல் தினந்தோறும்
நனைந்தபடி இருப்போமா..
நான் யாரோ நீ யாரோ நமை நாமே மறப்போமா..
பெண்: உன் விரல் நகம் படும்போது
இந்த வீணைக்கு வலிக்காது..
எனை தொடையினில் ஏந்தி தினசரி மீட்டு எனக்கது சலிக்காது..
ஆண்: பாய் ஃபிரெண்ட் தான் பக்கம் வந்தான் நிலவே..சொல் நிலவே..
பாவை என்னை பார்க்கவில்லையே நிலவே.. கேள் நிலவே..
பெண்: அவன் நடையோ தனியழகு
உடையோ தனியழகு
அப்படியோர் ஆணழகு
ஆயிரத்தில் ஓரழகு
ஆண்: பாய் ஃபிரெண்ட் தான் பக்கம் வந்தான் நிலவே..சொல் நிலவே..
பெண்: பார்த்து ரொம்ப நாளானதே நிலவே என் நிலவே..
......................
Songs lyrics from minsara kanna movie: