UN PER SOLLA AASAIDHAN
உன் பேர் சொல்ல ஆசை
Movie: Minsara kanna
Singers:Hariharan, Sujatha mohan
Music director: Deva
பெண்: உன் பேர் சொல்ல ஆசைதான்..
உள்ளம் உருக ஆசைதான்..
ஆண்: உன் பேர் சொல்ல ஆசைதான்..
உள்ளம் உருக ஆசைதான்..
உயிரில் கரைய ஆசைதான்.. ஆசைதான்..
உன் மேல் ஆசைதான்..
பெண்: உன் பேர் சொல்ல ஆசைதான்..
உள்ளம் உருக ஆசைதான்..
உயிரில் கரைய ஆசைதான்.. ஆசைதான்..
உன் மேல் ஆசைதான்..
ஆண்: உன் தோள் சேர ஆசைதான்..
உன்னில் வாழ ஆசைதான்..
உனக்குள் உறைய ஆசைதான்..
உலகம் மறக்க ஆசைதான்..
ஒன்றும் ஒன்றும் ஒன்றாய் ஆக ஆசைதான்..
பெண்: உன் பேர் சொல்ல ஆசைதான்..
உள்ளம் உருக ஆசைதான்..
உயிரில் கரைய ஆசைதான்.. ஆசைதான்..
உன் மேல் ஆசைதான்..
பெண்: கண்ணில்..கடைக்கண்ணில் நீயும் பார்த்தால் போதுமே..
கால்கள் எந்தன் கால்கள் காதல் கோலம் போடுமே..
ஆண்: நாணம் கொண்டு மேகம் ஒன்றில் மறையும் நிலவென..
கூந்தல் கொண்டு முகத்தை நீயும் மூடும் அழகென்ன..
பெண்: தூக்கத்தில்.. உன் பேரை நான் சொல்ல..
காரணம்.. காதல்தானே..
ஆண்: பிரம்மன் கூட ஒரு கண்ணதாசன் தான்..
உன்னை படைத்ததாலே..
பெண்: உன் பேர் சொல்ல ஆசைதான்..
உள்ளம் உருக ஆசைதான்..
உயிரில் கரைய ஆசைதான்.. ஆசைதான்..
உன் மேல் ஆசைதான்..
ஆண்: நீயும் என்னை பிரிந்தால் எந்தன் பிறவி முடியுமே..
மீண்டும் வந்து சேர்ந்தால் மறுபிறவி தொடருமே..
பெண்: நீயும் கோவில் ஆனால் சிலையின் வடிவில் வருகிறேன்..
நீயும் தீபம் ஆனால் ஒளியும் நானே ஆகிறேன்..
ஆண்: வானின்றி வெண்ணிலா இங்கில்லை..
நாமின்றி காதல் இல்லையே..
பெண்: காலம் கரைந்த பின்னும் கூந்தல் நரைத்த பின்னும்..
அன்பில் மாற்றமில்லையே..
ஆண்: உன் பேர் சொல்ல ஆசைதான்..
உள்ளம் உருக ஆசைதான்..
உயிரில் கரைய ஆசைதான்.. ஆசைதான்..
உன் மேல் ஆசைதான்..
பெண்: உன் தோள் சேர ஆசைதான்..
உன்னில் வாழ ஆசைதான்..
உனக்குள் உறைய ஆசைதான்..
உலகம் மறக்க ஆசைதான்..
ஒன்றும் ஒன்றும் ஒன்றாய் ஆக ஆசைதான்
ஆண்: ஆசைதான்..உன் மேல் ஆசைதான்..
பெண்: ஆசைதான்..உன் மேல் ஆசைதான்..
....................
Songs lyrics from minsara kanna movie:
