YELLE LAMA
ஏல்லே லமா
Movie: 7 am arivu
Singers: Vijay prakash, Karthik, Shalini, Shruthi hassan
Music director: Harris jayaraj
ஆண்: ஏல்லே லமா.. ஏலே ஏலமா..
சொல்லாமலே உள்ளம் துள்ளுமா..
நெஞ்சோரமா நெஞ்சின் ஓரமா..
வந்தாளம்மா.. வெள்ளம் அள்ளுமா..
என் ஜன்னல் கதவிலே..
இவள் பார்வை பட்டு தெறிக்க..
ஒரு மின்னல் பொழுதிலே..
உன் காதல் என்னை இழுக்க..
என் காலும் விண்ணில் தாவுதடி குதிக்க..
ஆண்: ஏல்லே லமா..
பெண்: ஏலே ஏலமா..
ஆண்: சொல்லாமலே..
பெண்: உள்ளம் துள்ளுமா..
ஆண்: நெஞ்சோரமா..
பெண்: நெஞ்சின் ஓரமா..
ஆண்: வந்தாளம்மா..
பெண்: வெள்ளம் அள்ளுமா..
என் ஜன்னல் கதவிலே..
இவன் பார்வை பட்டு தெறிக்க..
ஒரு மின்னல் பொழுதிலே..
உன் காதல் என்னை இழுக்க..
என் காலும் விண்ணில் தாவி அது குதிக்க..
ஆண்: அடி நியூட்டன் ஆப்பிள் விழ.. புவி ஈர்ப்பை கண்டானடி..
இன்று நானும் உன்னில் விழ..விழி ஈர்ப்பை கண்டேனடி..
பெண்: ஓசை கேட்காமலே..இசை அமைத்தான் பீத்தோவனே..
நீ என்னை கேட்காமலே..என்னை காதல் செய் நண்பனே..
ஆண்: உத்து மதிப்பாய் என்னை பார்த்தவளும் நீதானே..
குப்பை கூடை போல் நெஞ்சை கலைத்தவள் நீதானே..
மேலும் மேலும் அழகாய் மாறி போனேன் நானே..
ஆண்:ஏல்லே லமா.. ஏலே ஏலமா..
சொல்லாமலே உள்ளம் துள்ளுமா..
பெண்: நெஞ்சோரமா நெஞ்சின் ஓரமா..
சந்தோஷம்மா.. வெள்ளம் அள்ளுமா..
ஆண்: என் ஜன்னல் கதவிலே..
இவள் பார்வை பட்டு தெறிக்க..
பெண்: ஒரு மின்னல் பொழுதிலே..
உன் காதல் என்னை இழுக்க..
ஆண்: என் காலும் விண்ணில் தாவுதடி குதிக்க..
பெண்: சிறு வேரும் இல்லாமலே..
துளி நீரும் இல்லாமலே..
இள வெயிலும் படாமலே..
பூப்பூக்கும் இன்பம் தந்தாய்..
ஆண்: தோளில் விழாமலே..
கை சிறிதும் படாமலே..
உன் நிழலும் தொடாமலே..
நீ என்னை கொள்ளை இட்டாய்..
பெண்: இருவரும் மட்டும் வாழ பூமி ஒன்று செய்வோமா..
இரவொன்றே போதும் என்று பகலிடம் சொல்வோமா..
ஆண்: வேறு வேலை ஏதும் இன்றி காதல் செய்வோம் வா வா..
பெண்: ஏலே லமா..
ஆண்: ஏலே ஏலமா..
பெண்: சொல்லாமலே..
ஆண்: உள்ளம் துள்ளுமா..
ஆண்: நெஞ்சோரமா..
பெண்: நெஞ்சின் ஓரமா..
ஆண்: வந்தாளம்மா..
பெண்: வெள்ளம் அள்ளுமா..
ஆண்: என் ஜன்னல் கதவிலே..
இவள் பார்வை பட்டு தெறிக்க..
ஒரு மின்னல் பொழுதிலே..
உன் காதல் என்னை இழுக்க..
என் காலும் விண்ணில் தாவுதடி குதிக்க..
......................
Songs lyrics from 7 am arivu movie:-
