YAMMA YAMMA
யம்மா யம்மா
Movie: 7 am arivu
Singers: S.P.Balasubramaniam
Music director: Harris jayaraj
யம்மா யம்மா காதல் பொன்னம்மா..
நீ என்ன விட்டு போனதென்னம்மா..
நெஞ்சுக்குள்ளே காயம் ஆச்சம்மா..
என் பட்டாம்பூச்சி சாயம் போச்சம்மா..
அடி ஆணோட காதல் கைரேக போல..
பெண்ணோட காதல் கைக்குட்ட போல..
கனவுக்குள்ளே அவள வச்சேனே..
என் கண்ண ரெண்ட திருடி போனாளே..
புல்லாங்குழல கையில் தந்தாளே..
என் மூச்சு காத்த வாங்கி போனாளே..
பொம்பளைய நம்பி கெட்டு போனவங்க ரொம்ப..
அந்த வரிசையில் நானும் இப்ப கடைசியில் நின்னேன்..
முத்தெடுக்க போனால் உன் மூச்சடங்கும் தன்னால்..
காதல் முத்தெடுத்த பின்னால் மனம் பித்தமாகும் பெண்ணால்..
அவ கைய விட்டு தான் போயாச்சு..
கண்ணு ரெண்டுமே பொய்யாச்சு..
காதல் என்பது வீண் பேச்சு..
மனம் உன்னாலே புண்ணா போச்சு..
காதல் பாதை கல்லு முள்ளுடா..
அத கடந்து போன ஆளே இல்லடா..
காதல் ஒரு போத மாத்திர..
அதை போட்டுகிட்டா மூங்கில் யாத்திரை..
யம்மா யம்மா காதல் பொன்னம்மா..
நீ என்ன விட்டு போனதென்னம்மா..
நெஞ்சுக்குள்ள காயம் ஆச்சும்மா..
என் பட்டாம்பூச்சி சாயம் போச்சம்மா..
ஓட்ட போட்ட மூங்கில் அது பாட்டு பாட கூடும்..
நெஞ்சில் ஓட்ட போட்ட பின்னும் மனம் ஒன்ன பத்தி பாடும்..
வந்து போனதாரு..ஒரு நந்தவன தேரு..
நம்பி நொந்து போனன் பாரு ..அவ பூ இல்ல நாரு..
என்ன திட்டம் போட்டு நீ திருடாதே..
எட்ட நின்னு நீ வருடாதே..
கட்டெறும்ப போல் நெருடாதே..
மனம் தாங்காதே தாங்காதே..
வானவில்லின் கோலம் நீயம்மா..
என் வானம் தாண்டி போனதெங்கம்மா..
காதல் இல்லா ஊரு எங்கடா..
என்ன கண்ண கட்டி கூட்டி போங்கடா..
யம்மா யம்மா காதல் பொன்னம்மா..
நீ என்ன விட்டு போனதென்னம்மா..
நெஞ்சுக்குள்ள காயம் ஆச்சம்மா..
என் பட்டாம்பூச்சி சாயம் போச்சம்மா..
அடி ஆணோட காதல் கைரேக போல..
பெண்ணோட காதல் கைக்குட்ட போல..
கனவுக்குள்ளே அவள வச்சேனே..
என் கண்ண ரெண்ட திருடி போனாளே..
புல்லாங்குழல கையில் தந்தாளே..
என் மூச்சு காத்த வாங்கி போனாளே..
....................
Songs lyrics from 7 am arivu movie:-
