KADAL RAASA NAAN

 கடல் ராசா நான்




Movie: Maryan 

Singers: Yuvan Shankar raja 

Music director: A.r.rahman 


ஆடாத கால்களும் ஆடுமய்யா
எங்க காதோரம் கடல்புறா பாடுமய்யா..
வங்காள கரையோரம் வாருமய்யா
எங்க பாய்மர விளையாட்டைப் பாருமய்யா..

கொம்பன் சுறா வேட்டையாடும்
கடல்ராசா நான் கடல் ராசா நான்..
ரத்தம் சிந்தி முத்து குளித்திடும் கடல்ராசா மரியேன் நான்..
நெத்திலி கொழம்பு வாட..ஹே ஹே ஹே..
எங்க நீரோடி காத்துல வீசுமய்யா..
ஏ ஒத்த மர கள்ளும் உப்பு கருவாடும்
சித்தம் குளிர்ந்திடும் போதை ஐயா..

ஏக்கம் கொண்ட ஆவி அழுதிட 
கோபம் கொண்ட வித்தையைக் காட்டும் கோமாளி நான்..
ஏக்கம் கொண்ட ஆவி அழுதிட 
கோபம் கொண்ட வித்தையைக் காட்டும் கோமாளி நான்..

கொம்பன் சுறா வேட்டையாடும்
கடல்ராசா நான் கடல் ராசா நான்..
ரத்தம் சிந்தி முத்து குளித்திடும் கடல்ராசா மரியேன் நான்..ஆ...

நான் ஒத்தையிலே பாடுறேனே தன்னால..
இந்த பாலைவன பாறைகளின் முன்னால முன்னால..
நான் ஒத்தையிலே பாடுறேனே தன்னால..
இந்த பாலைவன பாறைகளின் முன்னால..
வெறும் புத்திகெட்ட பாவிகளின் நடுவே பொலம்பும் என் உயிரே உயிரே..
நான் ஊரு விட்டு ஊரு வந்தேன் தனியாக
இப்ப ஊனமாக சுத்துறனே அடியே என் கூட்டம் வரும் உள்ள சேரும் நினைப்புல தவிச்சேன் பனிமலரே பனிமலரே பனிமலரே..

கொம்பன் சுறா வேட்டையாடும்
கடல்ராசா நான் கடல் ராசா நான்..
கொம்பன் சுறா வேட்டையாடும்
கடல்ராசா நான் கடல் ராசா நான்..



.....................




Songs lyrics from Maryan movie:-