AARAARO

 ஆராரோ 



Movie: 24

Singers: Sakthisree gopalan 

Music director: A.r.rahman 


ம்..ஆராரோ..
ம்..ஆராரோ..
ம்.. கண்ணே நீ.. 
ஆளப்பிறந்தவன் ஆராரோ..
ம்..ஆராரோ..
ம்..ஆராரோ..
ம்.. கண்ணே நீ.. 
ஆளப்பிறந்தவன் ஆராரோ..
இளஞ்சேயே ஆராரோ..
சேமித்த சிரிப்பே ஆராரோ..
படிக விழியில் நீ பார்த்தால் 
முடியும் துயரம் ஆராரோ..
உன் சிறு கையின் அசைவினிலே 
என் பூமி சுழன்றிடும் ஆராரோ..
உன் ஓர் இதய துடிப்பினிலே 
என் காலம் அடங்கிடும் ஆராரோ..

ம்..ஆராரோ..
ம்..ஆராரோ..
ம்.. கண்ணே நீ.. 
ஆளப்பிறந்தவன் ஆராரோ..

மண்ணில் தோன்றும் உயிருக்கு எல்லாம் ஏதோ அர்த்தம் இருக்குமடா..
எந்தன் அர்த்தம் நீதானே..
எந்தன் அந்தம் நீதானே..
இந்த வரத்தை நான் பெறவே.. இத்தவத்தை புரிந்தேன் ஆராரோ ..
நித்தில நிலவே ஆராரோ..
நித்திரை கொள்வாய் ஆராரோ..
நித்தில நிலவே ஆராரோ..
நித்தியம் நீயே ஆராரோ..

ம்..ஆராரோ..
ம்..ஆராரோ..
ம்.. கண்ணே நீ.. 
ஆளப்பிறந்தவன் ஆராரோ..
ம்..ஆராரோ..
ம்..ஆராரோ..
ம்.. கண்ணே நீ..
ஆளப்பிறந்தவன் ஆராரோ..
ஆளப்பிறந்தவன் ஆராரோ..




.......................



Songs lyrics from 24 movie: