THODA THODA
தொட தொட மலர்ந்ததென்ன
Movie: Indira
Singers: S.P.Balasubramaniam, K.S.chithra
Music director: A.r.rahman
ஆண்: தொட தொட மலர்ந்ததென்ன..
பூவே தொட்டவனை மறந்ததென்ன..
தொட தொட மலர்ந்ததென்ன..
பூவே தொட்டவனை மறந்ததென்ன..
பார்வைகள் புதிதா..
ஸ்பரிசங்கள் புதிதா..
மழை வர பூமி மறுப்பதென்ன..
பார்வைகள் புதிதா..
ஸ்பரிசங்கள் புதிதா..
மழை வர பூமி மறுப்பதென்ன..
தொட தொட மலர்ந்ததென்ன..
பூவே தொட்டவனை மறந்ததென்ன..
ஆண்: அந்த இள வயதில்..
ஆற்றங்கரை மணலில்..
காலடி தடம் பதித்தோம் யார் அழித்தார்..
பெண்: நந்தவனக் கரையில்..
நட்டு வைத்த செடியில்..
மொட்டு விட்ட முதற் பூவை யார் பறித்தார்..
ஆண்: காதலர் தீண்டாத பூக்களில் தேனில்லை..
பெண்: இடைவெளி தாண்டாதே..
என் வசம் நானில்லை..
பெண்: தொட தொட மலர்ந்ததென்ன..
பூவே சுட சுட நனைந்ததென்ன..
பார்வைகள் புதிது..
ஸ்பரிசங்கள் புதிது..
நரம்புகள் பின்னப் பின்ன நடுக்கம் என்ன..
தொட தொட மலர்ந்ததென்ன..
பூவே சுட சுட நனைந்ததென்ன..
ஆண்: பனிதனில் குளித்த..
பால் மலர் காண..
இருபது வசந்தங்கள் விழி வளர்த்தேன்..
பெண்: பசித்தவன் அமுதம்..
பருகிடத் தானே..
பதினேழு வசந்தங்கள் இதழ் வளர்த்தேன்..
ஆண்: இலை மூடும் மலராக இதயத்தை மறைக்காதே..
பெண்: மலர் கொள்ளும் காற்றாக இதயத்தை உலுக்காதே..
பெண்: தொட தொட மலர்ந்ததென்ன..
பூவே சுட சுட நனைந்ததென்ன..
ஆண்: பார்வைகள் புதிதா..
ஸ்பரிசங்கள் புதிதா..
மழை வர பூமி மறுப்பதென்ன..
பார்வைகள் புதிதா..
ஸ்பரிசங்கள் புதிதா..
மழை வர பூமி மறுப்பதென்ன..
தொட தொட மலர்ந்ததென்ன..
பூவே தொட்டவனை மறந்ததென்ன..
.........................
Songs lyrics from Indira movie:-
