ACHCHAM ACHCHAM ILLAI
அச்சம் அச்சம் இல்லை
Movie:Indira
Singers:Sujatha mohan, anuradha sriram, G.V.Prakash, Swetha
Music director: A.r.rahman
விடியாத இரவென்று எதுவுமில்லை..
இல்லை இல்லை இல்லை இல்லை
முடியாத துயர் என்று எதுவும் இல்லை..
இல்லை இல்லை இல்லை இல்லை
வடியாத வெள்ளம் என்று எதுவுமில்லை..
இல்லை இல்லை இல்லை இல்லை
வாழாத வாழ்க்கை என்று எதுவும் இல்லை
இல்லை இல்லை இல்லை இல்லை
ஹே அச்சம் அச்சம் இல்லை..
இனி அடிமை எண்ணம் இல்லை..
நம் காலம் இங்கே கூடிப்போச்சு கண்ணீர் மிச்சமில்லையே ஏ..ஏ..ஏ..ஏ..
ஹே அச்சம் அச்சம் இல்லை..
இனி அடிமை எண்ணம் இல்லை..
நம் காலம் இங்கே கூடிப்போச்சு கண்ணீர் மிச்சமில்லையே ஏ..ஏ..ஏ..ஏ..
காலம் மாறிப்போச்சு நம் கண்ணீர் மாறிப்போச்சு..
நாளை நல்ல நாளை என்ற நம்பிக்கை உண்டாச்சு..
காலம் மாறிப்போச்சு நம் கண்ணீர் மாறிப்போச்சு..
நாளை நல்ல நாளை என்ற நம்பிக்கை உண்டாச்சு..
ஹே அச்சம் அச்சம் இல்லை..
இனி அடிமை எண்ணம் இல்லை..
நம் காலம் இங்கே கூடிப்போச்சு கண்ணீர் மிச்சமில்லையே ஏ..ஏ..ஏ..ஏ..
அந்த நிலா நிலா நிலா நிலா நீ கொண்டோடி வா..
ஜும் ஜும் ஜும் ஜும் ஜும் ஜும்
ஜும் ஜும் ஜும் ஜும் ஜும் ஜும்
அந்த நிலா நிலா நிலா நிலா நீ கொண்டு ஓடி வா..
பட்டாம்பூச்சி சுற்றும்..
மனிதன் என்ன மட்டம்..
அட இன்னும் கொஞ்சம் போனால் என்ன வானம் தலையில் தட்டும்..
பட்டாம்பூச்சி சுற்றும்..
மனிதன் என்ன மட்டம்..
அட இன்னும் கொஞ்சம் போனால் என்ன வானம் தலையில் தட்டும்..
வாடி இளைய செல்லியே..
வாடி இலைய செல்லியே..
நம் காலம் சொல்லும் நம்மை வாழ சொல்லியே..
அம்மா அழகுக் கண்ணம்மா..
அம்மா அழகுக் கண்ணம்மா..
இதை நம்ம பூமி என்று அழுத்தி சொல்லம்மா..
ஹே அச்சம் அச்சம் இல்லை..
இனி அடிமை எண்ணம் இல்லை..
நம் காலம் இங்கே கூடிப்போச்சு கண்ணீர் மிச்சமில்லையே..
ஹே அச்சம் அச்சம் இல்லை..
இனி அடிமை எண்ணம் இல்லை..
நம் காலம் இங்கே கூடிப்போச்சு கண்ணீர் மிச்சமில்லையே..
காலம் மாறிப்போச்சு நம் கண்ணீர் மாறிப்போச்சு..
நாளை நல்ல நாளை என்ற நம்பிக்கை உண்டாச்சு..
காலம் மாறிப்போச்சு நம் கண்ணீர் மாறிப்போச்சு..
நாளை நல்ல நாளை என்ற நம்பிக்கை உண்டாச்சு..
லலலல்லலலூ.. பட்டாம்பூச்சி..
லலலல்லலலூ.. பட்டாம்பூச்சி..
வானம் பக்கம் இனி வாழ்க்கை ரொம்ப பக்கம்..
அச்சம் அச்சம் துச்சம் என்றால் பக்கம் பக்கம் சொர்க்கம்..
வானம் பக்கம் இனி வாழ்க்கை ரொம்ப பக்கம்..
அச்சம் அச்சம் துச்சம் என்றால் பக்கம் பக்கம் சொர்க்கம்
பூமி தொறந்து கிடக்கு..
அட மனுசப்பய மனசு பூட்டிக்கெடக்கு..
பூமி தொறந்து கெடக்கு..
அட மனுசப்பய மனசு பூட்டிக்கெடக்கு..
இனி அச்சம் அச்சம் இல்லை..
இனி அடிமை எண்ணம் இல்லை..
இனி அச்சம் அச்சம் இல்லை..
இனி அடிமை எண்ணம் இல்லை..
நம் காலம் இங்கே கூடிப்போச்சு கண்ணீர் மிச்சமில்லையே ஏ..ஏ..ஏ..ஏ..ஏ..
இன்பக்காற்று வீசட்டும்
எட்டுத்திக்கும் பரவட்டும்..
பரவட்டும் பரவட்டும் பரவட்டும் பரவட்டும்..
மனித பூக்கள் மலரட்டும்
மனங்கள் இன்னும் விரியட்டும்..
விரியட்டும் விரியட்டும் விரியட்டும் விரியட்டும்..
இன்பக்காற்று வீசட்டும் எட்டுத்திக்கும் பரவட்டும்
மனித பூக்கள் மலரட்டும் மனங்கள் இன்னும் விரியட்டும்
குற்றம் குற்றம் எரியட்டும்..
சுற்றம் சுற்றம் வாழட்டும்..
வட்டம் வட்டம் விரியட்டும்..
வானம் தொட்டு வளரட்டும்..
வட்டம் வட்டம் விரியட்டும்..
வானம் தொட்டு வளரட்டும்..
கோழி சிறகில் குஞ்சை போலவே பூமிப்பந்து உறங்கட்டும்..
ரத்தம் சிந்தா நூற்றாண்டு புத்தம் புதிதாய் விடியட்டும்..
........................
Songs lyrics from Indira movie:-