MANJAL VEYIL
மஞ்சள் வெயில் மாலையிதே
Movie: Vettaiyadu vilaiyadu
Singers: Hariharan, Krish, Nakul
Music director: Harris jayaraj
வெண்ணிலவே.. வெள்ளி வெள்ளி நிலவே..
போகும் இடம் எல்லாமே கூட கூட வந்தாய்..
வெண்ணிலவே.. வெள்ளி வெள்ளி நிலவே..
நட்சத்திர பட்டாளம் கூட்டிக்கொண்டு வந்தாய்..
மஞ்சள் வெயில் மாலையிதே..
மெல்ல மெல்ல இருளுதே..
பளிச்சிடும் விளக்குகள் பகல் போல் காட்டுதே..
தயக்கங்கள் விலகுதே..
தவிப்புகள் தொடருதே..
அடுத்தது என்ன என்ன என்றே தான் தேடுதே..
வெண்ணிலவே.. வெள்ளி வெள்ளி நிலவே..
போகும் இடம் எல்லாமே கூட கூட வந்தாய்..
வெண்ணிலவே.. வெள்ளி வெள்ளி நிலவே..
நட்சத்திர பட்டாளம் கூட்டிக்கொண்டு வந்தாய்..
உலகத்தின் கடைசி நாள்..
இன்று தானோ என்பது போல்..
பேசி பேசி தீர்த்த பின்னும் ஏதோ ஒன்று குறையுதே..
உள்ளே ஒரு சின்னஞ்சிறு..
மரகத மாற்றம் வந்து..
குறுகுறு மின்னல் என குறுக்கே ஒடுதே..
வெண்ணிலவே.. வெள்ளி வெள்ளி நிலவே..
போகும் இடம் எல்லாமே கூட கூட வந்தாய்..
வெண்ணிலவே.. வெள்ளி வெள்ளி நிலவே..
நட்சத்திர பட்டாளம் கூட்டிக்கொண்டு வந்தாய்..
மஞ்சள் வெயில் மாலையிதே..
மெல்ல மெல்ல இருளுதே..
பளிச்சிடும் விளக்குகள் பகல் போல் காட்டுதே..
தயக்கங்கள் விலகுதே..
தவிப்புகள் தொடருதே..
அடுத்தது என்ன என்ன என்றே தான் தேடுதே..
வண்ணங்கள் வண்ணங்கள் அற்ற வழியில் வழியில் சிலர்
நடக்கிறார்.. நடக்கிறார்..
மஞ்சளும் பச்சையும் கொண்டு பெய்து பெய்து மழை
நனைகிறார்.. நினைக்கிறார்..
யாரோ யாரோ யாரோ அவள்..
ஹே..யாரோ யாரோ யாரோ அவன்..
ஒரு கோடும் கோடும் வெட்டிக்கொள்ள.. இரு தண்டவாளம் ஓட்டிச் செல்ல..
வெண்ணிலவே.. வெள்ளி வெள்ளி நிலவே..
போகும் இடம் எல்லாமே கூட கூட வந்தாய்..
வெண்ணிலவே.. வெள்ளி வெள்ளி நிலவே..
நட்சத்திர பட்டாளம் கூட்டிக்கொண்டு வந்தாய்..
இன்னும் கொஞ்சம் நீள வேண்டும்..
இந்த நொடி இந்த நொடி..
எத்தனையோ காலம் தள்ளி நெஞ்சோரம் பனித்துளி..
நின்று பார்க்க நேரமின்றி சென்றுகொண்டே இருந்தேனே..
நிற்க வைத்தாள் பேச வைத்தாள்..
நெஞ்சோரம் பனித்துளி..
..............
Songs lyrics from Vettaiyadu vilaiyadu movie:-
