SEPTEMBER MAADHAM

 செப்டம்பர் மாதம்



Movie: Alai payuthe 

Singers: Asha Bhosle , Shankar mahadevan

Music director: A.r.rahman 


பெண் : துன்பம் தொலைந்தது..இன்பம் தொலைந்தது..
துன்பம் தொலைந்தது..இன்பம் தொலைந்தது..

பெண் :செப்டம்பா் மாதம்..செப்டம்பா் மாதம்..
வாழ்வின் துன்பத்தைத் தொலைத்து விட்டோம்..
செப்டம்பா் மாதம்.. செப்டம்பா் மாதம்.. வாழ்வின் துன்பத்தைத் தொலைத்து விட்டோம்..
அக்டோபா் மாதம்..அக்டோபா் மாதம்.. வாழ்வின்
இன்பத்தைத் தொலைத்து விட்டோம்..

குழு : இன்பம் தொலைந்தது எப்போ..

பெண் : காதல் பிறந்ததே அப்போ

குழு : இன்பம் தொலைந்தது எப்போ

பெண் : கல்யாணம் முடிந்ததே அப்போ

ஆண் : செப்டம்பா் மாதம்..செப்டம்பா் மாதம்..
வாழ்வின் துன்பத்தைத் தொலைத்து விட்டோம்
அக்டோபா் மாதம்..அக்டோபா் மாதம் வாழ்வின் இன்பத்தைத் தொலைத்து விட்டோம்..

குழு : துன்பம் தொலைந்தது எப்போ..

ஆண் : காதல் பிறந்ததே அப்போ..

குழு : இன்பம் தொலைந்தது எப்போ..

ஆண் : கல்யாணம் முடிந்ததே அப்போ..

ஆண் : ஹே.. பெண்ணே..
காதல் என்பது இனிக்கும் விருந்து..
கல்யாணம் என்பது வேப்பங் கொழுந்து.. ஹே கண்ணே..

பெண் : ஓ.. நிறையை மட்டுமே காதல் பாா்க்கும்.. 
குறையை மட்டுமே கல்யாணம் பாா்க்கும் என் கண்ணா

ஆண் : காதல் பாா்ப்பது பாதி கண்ணில் கல்யாணம் பாா்ப்பது நாலு கண்ணிலடி பெண்ணே

பெண் : கிளிமூக்கின் நுனிமூக்கில்
கோபங்கள் அழகென்றால் ரசிக்கும்
ரசிக்கும் காதல் 
கல்யாணம் ஆனாலே துரும்பெல்லாம் தூணாக ஏன் ஏன் ஏன்
மோதல் 
பெண்கள் இல்லாமல் ஆண்களுக்காறுதல் கிடைக்காது

ஆண் : பெண்களே உலகில் இல்லையென்றால் ஆறுதலே
தேவை இருக்காது..

ஆண் :செப்டம்பா் மாதம்..செப்டம்பா் மாதம்..
அக்டோபா் மாதம்..அக்டோபா் மாதம்..

பெண் : நான் கண்டேன் காதல் என்பது கழுத்தில் சங்கிலி..
கல்யாணம் என்பது காலில் சங்கிலி 
என் செய்வேன்

ஆண் : கல்யாணம் என்பதைத்
தள்ளிப் போடு தொண்ணுாறு
வரைக்கும் பூவை தாடு வா அன்பே

பெண் : காதல் பொழுதில்
விரும்பும் குறும்பு கல்யாணக்
கட்டிலில் கிடைப்பதில்லையே நண்பா

ஆண் : பிாிவொன்று நேராத
உறவொன்றில் சுகமில்லை
காதல் காதல் அதுதான்
உறவோடு சிலகாலம்
பிாிவோடு சிலகாலம்
நாம் வாழ்வோம் வா வா..

ஆண் : ஆண்கள் இல்லாமல்
பெண்களுக்காறுதல் கிடைக்காது

பெண் : ஆண்களே உலகில்
இல்லையென்றால் ஆறுதலே
தேவை இருக்காது

ஆண் : செப்டம்பா் மாதம்..செப்டம்பா் மாதம் 
வாழ்வின் துன்பத்தைத் தொலைத்து விட்டோம்..
அக்டோபா் மாதம்..அக்டோபா் மாதம் 
வாழ்வின் இன்பத்தைத் தொலைத்து விட்டோம்

குழு : இன்பம் தொலைந்தது எப்போ

பெண் : காதல் பிறந்ததே அப்போ

குழு : இன்பம் தொலைந்தது எப்போ

ஆண் : கல்யாணம் முடிந்ததே அப்போ



.............


Songs lyrics from Alai payuthe movie:-