KANNALA KANNALA

 கண்ணால கண்ணால

Movie:  Thani oruvan

Singers:Kaushik Krish, Padmalatha

Music director: Hiphop Tamizha 

பெண்:  நெஞ்சோரமா..ஒரு காதல் துளிரும்போது..
கண்ணோரமா..சிறு கண்ணீர் துளிகள் ஏனோ..
கண்ணாளனே..என் கண்ணால் உன்ன கைதாக்கிட நான் நெனச்சேனே..
கண்ணீரிலே ஒரு மை போலவே உன்னோடு சேர துடிச்சேனே..
மனசுல பூங்காத்து..
நீ பாக்கும் திசையில் வீசும்போது..
நமக்குன்னு ஒரு தேசம்..
அதில் இருவரும் சேர்ந்து ஒன்னா வாழ்வோம்..

கண்ணால கண்ணால என்மேல என்மேல தீய எறிஞ்சுபுட்ட..
சொல்லாத சொல்லால உள்நெஞ்சில் ஏதோ கலவரம் புரிஞ்சுபுட்ட..
கண்ணால கண்ணால என்மேல என்மேல தீய எறிஞ்சுபுட்ட..
சொல்லாத சொல்லால உள்நெஞ்சில் ஏதோ கலவரம் புரிஞ்சுபுட்ட..

ஆண்: காதல் ராகம் நீதானே..
உன் வாழ்வின் கீதம் நான்தானே..
காதலோடு வாழ்வேனே..
இந்த வாழ்வின் எல்லை போனாலும்..
மறந்ததில்லை என் இதயம்..
உன் நினைக்க முப்பொழுதும்..
கரையவில்லை உன் இதயம்..
கலங்குகிறேனே எப்பொழுதும்..

பெண்: கலங்குகிறேனே எப்பொழுதும் காதலினாலே இப்பொழுதும்..

ஆண்:  ஜன்னல் ஓரம் தென்றல் காற்று வீசும் போதிலே..
கண்கள் ரெண்டும் காதலோடு பேசும் போதிலே..
இயற்கை அது வியந்திடுமே..
உன் அழகில் தினம் தினமே..
மழை வருமே மழை வருமே..
என் மனதுக்குள் புயல் வருமே..

பெண்:  மனசுல பூங்காத்து..
நீ பாக்கும் திசையில் வீசும்போது..
நமக்குன்னு ஒரு தேசம்..
அதில் இருவரும் சேர்ந்து ஒன்னா வாழ்வோம்..

கண்ணால கண்ணால என்மேல என்மேல தீய எறிஞ்சுபுட்ட..
சொல்லாத சொல்லால உள்நெஞ்சில் ஏதோ கலவரம் புரிஞ்சுபுட்ட..
கண்ணால கண்ணால என்மேல என்மேல தீய எறிஞ்சுபுட்ட..
சொல்லாத சொல்லால உள்நெஞ்சில் ஏதோ கலவரம் புரிஞ்சுபுட்ட..

............

Songs lyrics from thani oruvan movie:-